OUR CLIENTS
ஏசி அறையை விட்டு வெளியில் வராமல் பணியாற்றும் மாநகராட்சி ஆணையர்!
ஏசி அறையை விட்டு வெளியில் வராமல் பணியாற்றும் மாநகராட்சி ஆணையர்! Posted on 21-Feb-2019 ஏசி அறையை விட்டு வெளியில் வராமல் பணியாற்றும் மாநகராட்சி ஆணையர்!

வேலூர், பிப்.21-

குளிரூட்டப்பட்ட அறையை விட்டு வெளியில் வராமல் ஒப்பந்ததாரர்களுடன் பேசியே பொழுதை கழித்து வருகிறார் வேலூர் மாநகராட்சி ஆணையர் சிவ.சுப்பிரமணியன் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வேலூர் மாநகராட்சியானது வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. அதாவது ஸ்மார்ட் சிட்டி என்ற அந்தஸ்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் வேலூருக்கு பணியாற்ற வரும் மாநகராட்சி ஆணையர்களோ அந்தளவுக்கு ஈடுகொடுத்து பணியை செய்வது இல்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சொகுசாக காரில் வலம் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த காரும் குளிரூட்டப்பட்டதாகவே உள்ளது. காரில் இருந்து இறங்கியதும் மாநகராட்சியில் உள்ள குளிரூட்டப்பட்ட தனது அறைக்கு சென்று அமர்ந்து கொள்கிறார். அங்கு வரும் ஒப்பந்ததாரர்களிடம் மணிக்கணக்கில் பேசிக் கொண்டு கல்லா கட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். பொதுமக்கள் பல்வேறு பிரச்னைகளை மாநகர ஆணையரிடம் சொல்ல கால்கடுக்க பல மணி நேரம் காத்திருந்தாலும் ஆணையர் சிவ.சுப்பிரமணியனை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதே அன்றாட நிகழ்வாக மாநகராட்சியில் நடந்து வருகிறது. திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதியை கூட தரிசித்து விடலாம். ஆனால் வேலூர் மாநகராட்சியில் உள்ள ஆணையர் சிவ.சுப்பிரமணியனை அவ்வளவு எளிதில் சந்தித்து விட முடியாது. பொதுமக்களை பார்ப்பதாக எழுதி வைக்கப்பட்டுள்ள நேரத்தில் கூட மாநகராட்சி ஆணையரை சந்திக்க முடியாது. ஏசி காரில் செல்லும் ஆணையருக்கு வேலூர் மாநகராட்சி பகுதியில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன என்று தெரியாது. குப்பைகள் சரிவர அகற்றப்படுகின்றனவா?, பைப் லைன்கள் எங்கு உடைப்பு ஏற்பட்டுள்ளது?, எந்த பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை, கழிவுநீர் செல்லும் வாய்க்கால்கள் சரி செய்யப்பட்டதா? என்று எந்த விஷயமும் இவர் தனது காதுகளில் போட்டுக் கொள்வதில்லை இவரது இலக்கு அனைத்தும் ÔபÕ வைட்டமினை எப்பபடி வசூலிபப்து என்பதிலேயே இருக்கிறது. இவரிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை போட்டால் பல லட்ச கணக்கில் பணத்தை கைப்பற்றலாம் என்று ஒப்பந்ததாரர்களே கூறுகின்றனர். அவர் எதைப்பற்றியும் கவலை கொள்வதில்லை. தனது வேலையை மட்டும் பார்த்து கொண்டு சென்ற வண்ணமாக உள்ளார். 
வேலூர் மாநகராட்சியில் குமார் என்ற முன்னாள் ஆணையருக்கு பின்னர் இப்போதுள்ள சிவ.சுப்பிரமணியன் பணிக்காலத்தில்தான் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது என்று சொல்லலாம். அந்தளவுக்கு லஞ்சம் கரைபுறண்டு ஆறுபோல ஓடுகிறது. யாராக இருந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன் என்று மாநகராட்சியில் பணியாற்றும் சக பணியாளர்கள், ஊழியர்களிடம் தைரியம் கொடுத்து வருகிறாராம் இந்த மாநகராட்சி ஆணையர் சிவ.சுப்பிரமணியன் என்று சொன்னால் அது மிகையாகாது. 
இந்நிலையில், எந்த ஒரு அலுவலரும் என்ன பணியாற்றுகின்றனர் என்பது இவருக்கு தெரியாது. இன்னமும் ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தப்பட உள்ள நிலையில் இப்படி மந்தகதியில் செயல்படுவதற்கு இந்த மாநகராட்சி ஆணையர்தான் முமுக்க முழுக்க காரணமாகும். கடந்த ஜனவரி மாதம் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை ஒழிப்பதாக கூறிக் கொண்டு 5 பேர் கொண்ட கூட்டம் அந்தந்த மண்டலங்களில் கடை கடையாக சோதனை என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். அது திருவிழா போன்று நடந்து முடிந்ததும்தான் தாமதம், தற்போது மீண்டும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மாநகர எல்லையில் இயங்கும் ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், காய்கனி கடைகள், கோழி, ஆடு இறைச்சி கடைகள் என்று எங்கு பார்த்தாலும் தாராளமாக புழங்க ஆரம்பித்துள்ளது. அதுமட்டுமின்றி ஆங்காங்கே ஆக்கிரமிப்புகளும் பெருகி உள்ளன. மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மட்டும் இதிலிருந்து சற்று விதிவிலக்காக பணியாற்றுகின்றனர். காய்கனி கழிவுகளை வீடுகளில் குப்பைகளை சேகரிக்கும் தொழிலாளர்கள் இல்லத்தரசிகளிடம் கேட்கின்றனர். ஆனால் குப்பைகளில் தேவையற்ற திடக்கழிவுகள் மட்டுமே உள்ளன. வேறெந்த கழிவுகளும் இல்லை. இதுபோன்ற தகவல்கள் கூட மாநகர ஆணையருக்கு தெரியாது என்றால் அவரது செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பார்த்து கொள்ளலாம். தமிழக அரசு உத்தரவை (பிளாஸ்டிக் கேரி பேக் ஒழிப்பு) செயல்படுத்தாமல் அலட்சியப்போக்கில் செயல்படும் மாநகராட்சி ஆணையர் சிவ.சுப்பிரமணியன் மீது என்ன நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், மாநகர பொதுமக்களும் தெரிவித்துள்ளனர். 
1வது மண்டலம் துணை ஆணையர் மதிவாணன்  இவரது வலது கையாகவும் மற்றும் உதவியாளர் தீபன் இடது கையாகவும் பணியாற்றுவதாக மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும், மாநகராட்சியில் 
லஞ்ச கூட்டமைப்பு நடக்கின்றது என்று ஒருகூட்டம் போஸ்டர் அடித்து சுவர்களில் ஒட்டியுள்ளனர். இதனையும் இரவோடு இரவாக ஆட்களை வைத்து கிழித்து எரியபட்ட அவலமும் நடந்தேறியது மாநகராட்சியில் பரபரப்பாக பேசிவருகின்றனர். இதன் விவரம் மேலும் தொடரும்....

Label