OUR CLIENTS
திமுக - காங்கிரஸ் மக்களவை தேர்தல் கூட்டணி காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக - காங்கிரஸ் மக்களவை தேர்தல் கூட்டணி காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு Posted on 21-Feb-2019 திமுக - காங்கிரஸ் மக்களவை தேர்தல் கூட்டணி காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை, பிப்.21-

2019 மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் இடம்பெறும் காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளையும், புதுச்சேரியில் 1 தொகுதியையும் நேற்று ஒதுக்கியது திமுக.

தமிழ்நாடும், புதுச்சேரியும் சேர்த்து மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. மக்களவை தேர்தலில் திமுக - காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
அதிமுக அணியில் கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுக்குமான தொகுதி எண்ணிக்கை வெளியிடப்பட்டுவிட்டது. திமுக அணியில் முதல் கட்சியாக காங்கிரஸுக்கு உள்ள இடங்கள் நேற்று உறுதிசெய்யப்பட்டது.
10 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக சார்பில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர். பாலு, ஏ.வ. வேலு ஆகியோரும்,காங்கிரஸ் சார்பில் மேலிடப் பொறுப்பாளர்கள் முகுல் வாஸ்னிக், வேணுகோபால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, ராமசாமி, திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, வசந்த், விஜயதாரிணி மற்றும் பலர் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் நேற்று கலந்துகொண்டனர்.
முன்னதாக, டெல்லியிலிருந்து நேற்று மாலையில் சென்னை வந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், கிண்டி தனியார் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்தனர். பின்னர், மாலை 7:30 மணியளவுக்கு அண்ணா அறிவாலயம் வந்தனர். திமுக தலைவரும் 7:35க்கு அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார்.
இரவு 8:25 மணி அளவில் தேர்தல் கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த இறுதி பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரியும் கையெழுத்திட்டனர். பின்னர், திமுக - காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்., தொகுதி ஒதுக்கீடு குறித்து ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தமிழ்நாட்டில் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்போது, கூட்டணி குறித்து பேசுவோம் என்றார் ஸ்டாலின்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் பேசும்போது
திமுக காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அகில இந்திய அளவில் காங்கிரஸ் அரசு அமைக்க தமிழக வெற்றிகள் பெரிதும் கை கொடுக்கும் என்று வேணுகோபால் கூறினார்.
திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணிக் கட்சிகள்,  ஒவ்வொரு கட்சிக்குமான தொகுதிகளை கண்டறியும் பேச்சுவார்த்தை இனிமேல் நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Label