OUR CLIENTS
இறால் பண்ணைகளால் பதராகிய நெற்பயிர்கள்!
இறால் பண்ணைகளால் பதராகிய நெற்பயிர்கள்! Posted on 21-Feb-2019 இறால் பண்ணைகளால் பதராகிய நெற்பயிர்கள்!

பொன்னேரி, பிப்.21-

இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் விவசாயிகளின் நெற்பயிர்கள் பதராகி வீணாகி உள்ளன.

மீஞ்சூர் ஒன்றியம், பொதியாரங்குளம் கிராமத்தில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால் மழையை நம்பி விவசாயம் செய்யப்படுகிறது.கடந்த 2018ல் குறைவான அளவில் மழை பொழிந்ததால் விவசாயிகள் ஏரிகளில் தேங்கிய மழைநீரைக் கொண்டு 200 ஏக்கர் பரப்பளவில் நடவுப் பணிகளை மேற்கொண்டனர். மேற்கண்ட விவசாய நிலங்களின் அருகில் உள்ள இறால் பண்ணைகளின் கழிவு நீர் ஏரியில் விடப்படுகிறது. இதனால் விவசாயிகள் நடவு செய்த நெற்பயிர்கள் சரியான வளர்ச்சி இன்றி போனது.
இறால் பண்ணைகளின் கழிவுநீரால் உவர்ப்பாக மாறியிருந்த ஏரிநீரை பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டதால் நெற்பயிர்கள் முதிர்ச்சியடையாமல் பதராக மாறியது. அவற்றை அறுவடை செய்தால் ஒரு ஏக்கருக்கு எட்டுக்கும் குறைவான மூட்டைகளே கிடைப் பதால் விவசாயிகள் விரக்தி அடைந்து உள்ளனர். அவையும் தரமாக இல்லாத நிலையில் நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியவில்லை. ஒரு சில விவசாயிகள் அறுவடை செய்யாமல், அப்படியே போட்டு வைத்து உள்ளனர். விவசாயி களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: இறால் பண்ணைகளின் கழிவு நீர் வெளியேறு வதைத் தடுக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை இன்றி கிடக்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை தான் ஏரிநீரை நம்பி விவசாயம் செய்கிறோம்.தற்போது, அதற்கும் வழியின்றி கிடக்கிறது. அறுவடை செய்த நெல் மணிகளை வாங்க ஆளில்லை. மாடுகள், அந்த வைக் கோலைச் சாப்பிடுவ தில்லை. ஏரிக்கு அருகில் உள்ள இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும். அப்போது தான் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Label