OUR CLIENTS
சி.ஆர்.பி.எஃப்., வீரர்களுக்கு அஞ்சலி!
சி.ஆர்.பி.எஃப்., வீரர்களுக்கு அஞ்சலி! Posted on 21-Feb-2019 சி.ஆர்.பி.எஃப்., வீரர்களுக்கு அஞ்சலி!

வேலூர், பிப். 21-

வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணம் எய்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் வேலூரில் நடந்தது.

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் வீரமரணம் எய்திய சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே உள்ள ஆஞ்சநேயர் சிலையருகே நடந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஆர்.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் என்.எஸ்.கே.பத்ரி முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் எல்.சி.சசிகுமார், மாநகர செயலாளர் ஆர்.குமரவடிவேலன், மாவட்ட பொதுக்குழு தலைவர் எம்எஸ்.குகன், மாவட்ட துணைச்செயலாளர் பி.சுரேந்தர், மாவட்ட துணைத்தலைவர்  காட்பாடி ஜெகதீசன், முன்னாள் ராணுவ வீரர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 
மாநகர தலைவர் ஏ.எம். ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு 
அஞ்சலி செலுத்தினர்.

Label