OUR CLIENTS
பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்: தமிழிசை கோரிக்கை
பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்: தமிழிசை கோரிக்கை Posted on 31-Aug-2016 பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்: தமிழிசை கோரிக்கை

சென்னை:
பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


தமிழகத்தில் மீண்டும் ஒரு தலைக்காதல் கொலை அதிர்ச்சியளிக்கும் வகையில் அரங்கேறியுள்ளது. கருவிலேயே பெண் கொலை செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும் என அனைவரும் போராடிக் கொண்டிருக்கிற காலத்தில் கரூரில் கல்வி அறையில் அக்கல்லூரி பெண் கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.

பெண்களுக்கான உரிமையை பேசிக்கொண்டிருக்கிறோம். பெண்களும் தங்கள் விருப்பத்திற்கு எதிரான விருப்பங்களை நிராகரிப்பதற்கு கூட உரிமை தமிழகத்தில் மறுக்கப்பட்டு வருகிறது என்பதை இத்தகைய தொடர் கொலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு ஓர் பாதுகாப்பற்ற தன்மை நிலவி வருகிறது என்பதும், சிறார்கள் வழி தவறுவதற்கு தமிழகத்தில் அதிக வாய்ப்பிருக்கிறது என்பதும், பல குற்றங்களுக்கு சிறார்கள் கேடயமாகப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதும் கவலை அளிக்க கூடியதாகவே உள்ளது.

பல கொலைகளும், திருட்டுகளும், தமிழகத்தில் துப்பு துலங்காமலேயே இருந்து கொண்டிருக்கிறது. ஆக பாதுகாப்பில் குறிப்பாக குழந்தைகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பில் தமிழகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கான குறியீடுதான் இந்த ஆவணக்குறிப்புகள் நம்மை எச்சரிக்கின்றது.

ஏ.டி.எம்.ல் பணம் எடுப்பது போய் ஏ.டி.எம்.மிற்கே பணம் எடுத்துச் செல்ல முடியாமல் வழியில் ரூ.15 லட்சம் கொள்ளை அடிக்கப்படுகிறது. சுவாதி கொலை சிக்கலில் இதுவரை முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. அதனால் தமிழகத்தை பாதுகாப்பானதாக ஆக்குவது அரசின் தலையாய கடமையாக இருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Label