OUR CLIENTS
தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது? : உச்சநீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது? : உச்சநீதிமன்றம் கேள்வி Posted on 21-Feb-2019 தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது? : உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி, பிப்.21-

தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னையை சேர்ந்த காயத்ரி என்ற மாணவி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தும் தனக்கு மருத்துக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றும் இட ஒதுக்கீடு 50 சதவிகிதமாக இருந்திருந்தால் தனக்கு இடம் கிடைத்திருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்தியாவில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்திற்கும் கூடுதலாக இருக்கக்கூடாது என்று 1992ம் ஆண்டு இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த 69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றிய அரசு, அந்த சட்டத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்த்ததன் மூலம் இன்று வரை 69% இட ஒதுக்கீடு முறை நீடித்து வருகிறது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் விஜயன் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 
இந்நிலையில் சென்னையை சேர்ந்த காயத்ரி என்ற மாணவி தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்ய கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நாடு முழுவதும் 50 சதவிகிதம் என்ற அளவில் இட ஒதுக்கீடு உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் 69 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளது ஏன் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. மேலும் எதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது, எந்த ஆண்டு முதல் 69 சதவிகித இட ஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ளது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு இறுதி விசாரணையை அடுத்த மாதம் 14ம் தேதி ஒத்திவைத்துள்ளனர்.

Label