OUR CLIENTS
பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை யமுனை ஆற்றில் இணைக்க முடிவு : நிதின் கட்கரி
பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை யமுனை ஆற்றில் இணைக்க முடிவு : நிதின் கட்கரி Posted on 21-Feb-2019 பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை  யமுனை ஆற்றில் இணைக்க முடிவு : நிதின் கட்கரி

டெல்லி, பிப்.21-

பாகிஸ்தானுக்கு பாயும் சிந்து நதி உள்ளிட்ட 3 நதிகளின் நீரை தடுத்து அதை இந்தியாவின் யமுனை ஆற்றை வளப்படுத்த பயன்படுத்துவோம் என மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் கடந்த 14ம் தேதி ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலை படைத் தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலை கண்டித்து பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த வர்த்தகத்துக்கு உகந்த நட்புறவு நாடு எனும் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களுக்கும் 200 சதவீதம் சுங்கவரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. 
இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவால் பாகிஸ்தானுக்கு ரூ.3 ஆயிரத்து 482.3 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கலாச்சார நிகழ்ச்சிகள், கிரிக்கெட் ஆகியவற்றிலிருந்து பாகிஸ்தானை ஒதுக்கும் நடைவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் 3 நதிகளின் நீரையும், யமுனை ஆற்றில் இணைக்க முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். இந்துஸ் நீர் ஒப்பந்தத்தின்படி ஜெலும், செனாப், இந்துஸ் நதி நீர் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 
இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தான் வழியாக சென்று அரபிக் கடலில் கலக்கும் இந்துஸ் நதியின் 80 சதவீத நீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள உரி பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் இந்திய வீரர்கள் 18 பேர் வீரமரணம் அடைந்தனர். அப்போது நடைபெற்ற தாக்குதலின் போதே, இந்த நதிகளை பாகிஸ்தானுக்கு செல்வதை தடை செய்வது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது அதனை நடைமுறைப்படுத்த உள்ளதாக மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்து அதை யமுனை ஆற்றில் இணைப்பதால் யமுனை ஆற்றின் நீர்வளம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 

Label