OUR CLIENTS
காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் விமானத்தில் பயணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!
காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் விமானத்தில் பயணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி! Posted on 21-Feb-2019 காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் விமானத்தில் பயணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

புதுடெல்லி, பிப்.21-

துணை ராணுவ வீரர்கள் தரைவழி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் கடந்த 14ம் தேதி ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் நடத்திய தற்கொலை படைத் தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் 350 கிலோ வெடிப்பொருட்களை சோதனை சாவடிகளை கடந்து தீவிரவாதி உள்ளே கொண்டு வந்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தீவிரவாதி தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பதிலடி தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தீவிரமாக தயாராகி வருகிறது. 
துணை ராணுவ வீரர்கள் ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போது தரை வழி கான்வாய் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி - ஸ்ரீநகர், ஸ்ரீநகர் - டெல்லி, ஸ்ரீநகர் - ஜம்மு செக்டார் பகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் காவலர், தலைமை காவலர் மற்றும் துணை காவலர் உள்ளிட்ட பதவிகளை சேர்ந்த 7.80,000 வீரர்கள் பயன்பெறுவர். துணை ராணுவ வீரர்கள் பணியின் போதும், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு செல்லும் போதும், விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் போதும் விமானத்தில் பயணம் செய்யலாம் என தகவல் அளித்துள்ளனர். இதன் மூலம் வீரர்களின் பயண நேரம் வெகுவாக குறையும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Label