OUR CLIENTS
அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி
அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி Posted on 21-Feb-2019 அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி

சென்னை, பிப்.21-

அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் இடையே மக்களவை தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னையில் எடப்பாடி, ஓ.பி.எஸ். உடன் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஏற்கனவே மக்களவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். அப்போது பேசிய துணை முதல்வர் ஓ.பி.எஸ். பாஜகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்களுக்கும் பாஜக ஆதரவை தெரிவிக்கும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமக 7 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது. மேலும் ஒரு மாநிலங்களவை இடமும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கும்போது அங்கு அதிமுகவுக்கு பாமக தனது முழு ஆதரவை அளிக்கும் என்பதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Label