OUR CLIENTS
திமுகவின் பெயரைச் சொல்லி ஏமாற்றி பணிக்கு செல்லாமல் ஊதியம் பெறும் சாலைப்பணியாளர்கள்! நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
திமுகவின் பெயரைச் சொல்லி ஏமாற்றி பணிக்கு செல்லாமல் ஊதியம் பெறும் சாலைப்பணியாளர்கள்! நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? Posted on 22-Feb-2019 திமுகவின் பெயரைச் சொல்லி ஏமாற்றி பணிக்கு  செல்லாமல் ஊதியம் பெறும் சாலைப்பணியாளர்கள்! நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

வேலூர், பிப்.22-

வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பகுதியில் திமுகவின் பெயரைச் சொல்லிக் கொண்டு அரசையும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளையும் ஏமாற்றி பணிக்குச் செல்லாமலேயே மாதா மாதம் ஊதியம் பெற்று வரும் சாலைப் பணியாளர்கள் மீது நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில்  பெரும்பாலும் சாலைப்பணியாளர்களாக பணியாற்றுபவர்கள் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் அடிப்பொடிகளாவார்கள். இவர்கள் பல சிபாரிசுகளின் பேரில் சாலைப்பணியாளர்களாக பணியில் சேர்ந்தனர். ஆனால் இப்போது பலர் கௌரவம் பார்த்து கொண்டு பணிக்கே செல்வதில்லை. மாறாக வீட்டில் இருந்து கொண்டு ஆடு, மாடுகளை மேய்ப்பது, சொந்த வேலைகளை கவனிப்பது என்று காலத்தை செலவிடுகின்றனர். குறிப்பாக வேலூர் மாவட்டம், காட்பாடி வள்ளிமலை ரோட்டில் ஆரம்பித்து பள்ளிக்குப்பம் ரயில்வே கேட் வரைக்கும் இடைப்பட்ட பகுதியில் பணியாற்றும் பணியாளர்களின் ஏமாற்று வேலைக்கு அளவே இல்லை. வருகைப்பதிவேட்டில் மட்டும் தினமும் வேலைக்கு வந்ததாக கையொப்பம் போட்டு விட்டு மாதா மாதம் ஊதியம் பெற்று வருகின்றனர். 
இதை கண்டும் காணாமல் இருப்பதற்கு மாதா மாதம் அந்த பணியாளர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கணிசமான ஒரு தொகையை கப்பம் கட்டுவதாக வெளியில் சொல்லிக் கொள்கின்றனர். அப்படியே வேலை நடக்கும் இடத்துக்கு சென்றாலும் தான் போட்டுக் கொள்ளும் பேன்ட்-ஷர்ட் கசங்காமல் நின்றபடி வேடிக்கை பார்த்து விட்டு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர் திமுகவின் பெயரைச் சொல்லி ஏமாற்றி வரும் பேர்வழிகள். இவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்பது தெரியவில்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் சாலைப் பணியாளர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க  வேண்டிய சாலை ஆய்வாளர், நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர், பொறியாளர்கள் யாரும் களத்துக்கு வருவதே இல்லை, பணியை பார்வையிடுவதும் இல்லை. இப்படி அரசு பணியில் ஏமாற்றும் பேர்வழிகளை அடையாளம் கண்டு அவர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய அதிமுக அரசு முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. 
திமுக இன்னமும் எந்த ஆட்சியையும், கோட்டையையும் பிடிக்கவில்லை. அதற்குள்ளாக திமுக பெயரைச் சொல்லி ஏமாற்ற ஆரம்பித்து விட்டனர் தில்லாலங்கடி பேர்வழிகள். வேலை செய்ய இயலாதவர்கள் தாமாக முன்வந்து பணியை ராஜிநாமா செய்து விட்டு சென்று விடலாமே என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படி நெடுஞ்சாலைத்துறையில் பல ஏமாற்று பேர்வழிகள் ஒளிந்து கொண்டுள்ளது வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுபோன்ற கருப்பு ஆடுகளை நெடுஞ்சாலைத்துறை அடையாளம் கண்டு அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். 
பலரை ஏய்த்து பிழைப்பு நடத்தி வருபவர்களை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஏன் தயக்கம் காட்டுகின்றனர். அப்படியென்றால் அந்த சாலைப்பணியாளர் சொல்வது போன்று ÔபÕ வைட்டமின் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் அமைதி காத்து வருகிறார்களா நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் என்ற சந்தேகம் எழ ஆரம்பித்துள்ளது. விரைவில் இதுபோன்ற மோசடி பேர்வழிகளை அடையாளம் கண்டு திருப்பதி ஏழுமலையானின் பல திருநாமங்களில் ஒரு பெயரை கொண்ட அந்த திமுக புள்ளியை களையெடுக்க நெடுஞ்சாலைத்துறை முன்வருமா?. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வசம் உள்ள நெடுஞ்சாலைத்துறையில் இப்படி காட்பாடி பகுதியில் திமுக பெயரை சொல்லி அராஜகத்தின் உச்சத்தில் உள்ள நபர் களையெடுக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label