OUR CLIENTS
நூலக கட்டடத்தில் இயங்கும் பால்வாடி இடவசதியின்றி குழந்தைகள் தவிப்பு!
நூலக கட்டடத்தில் இயங்கும் பால்வாடி இடவசதியின்றி குழந்தைகள் தவிப்பு! Posted on 23-Feb-2019 நூலக கட்டடத்தில் இயங்கும் பால்வாடி இடவசதியின்றி குழந்தைகள் தவிப்பு!

சிவகாசி, பிப்.23-

வெம்பக்கோட்டை தாலுகா செவல்பட்டியில் அங்கன்வாடி மையத்திற்கு கட்டட வசதி இல்லை.

இதனால் நூலக கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படும் அவல நிலை நிலவுகிறது. வெம்பக் கோட்டை தாலுகாவில் உள்ளது செவல்பட்டி கிராமம். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் அங்கன்வாடி மையத்திற்கு கட்டட வசதி இல்லை. பழைய கட்டிடம் இடிந்து சேதமடைந்து கிடப்பதால் அருகில் உள்ள நூலகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. 
இந்த மையத்தில் ஒரு பொறுப்பாளர், சமையலர் பணிபுரிந்து வருகின்றனர். நூலக கட்டடம் சிறியதாக உள்ளதால் குழந்தைகள் சிரமப்பட்டு வருகின்றனர். அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. அனைத்து மாணவர்களும் ஒன்றாக உட்கார்ந்து உணவு அருந்த போதிய இடவசதி இன்றி அவதிப்படுகின்றனர். செவல்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டி தரக்கோரி அதிமுக எம்பியிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம் அருகே புதிய அங்கன்வாடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். ஆனால் பல ஆண்டுகளாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
செவல் பட்டியில் அங்கன்வாடி மையத்திற்கு கட்டட வசதி பல ஆண்டுகளாக இல்லை. இது குறித்து எம்எல்ஏ, எம்பி.யிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகமும் குழந்தைகள் நலனில் எந்தவித அக்கரையும் எடுக்கவில்லை. ஏதாவது கட்டம் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்குண்டு தளிர்கள் மாண்ட பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரங்கல் தெரிவிப்பதால் எந்தவித பயனும் விளையப் போவதில்லை. விபத்து வரும் முன் காக்க வேண்டுமே தவிர விபத்து நிகழ்ந்த பின்னர் பார்க்கத்தான் முடியும். இது க்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்தது போன்று இருப்பதாக இருக்கும். ஆதலால் விரைந்து கட்டடத்தை பழுது நீக்கி தர வேண்டும். இல்லையென்றால் வேறு கட்டடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

Label