OUR CLIENTS
பாரத பிரதமரின் சம்மான் நிதி திட்டம் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்த முடிவு!
பாரத பிரதமரின் சம்மான் நிதி திட்டம் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்த முடிவு! Posted on 23-Feb-2019 பாரத பிரதமரின் சம்மான் நிதி திட்டம் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்த முடிவு!

வேலூர், பிப்.23-


சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசின் பிரதமரின் சம்மான் நிதி என்ற திட்டம் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டம் 1.12.2018 முதல்  நடைமுறைபடுத்தப்பட்டு நடப்பு நிதியாண்டில் தகுதியான பயனாளிகளுக்கு நேரடி பணபரிமாற்றம் செய்யப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ரு.6000- வழங்கப்பட உள்ளது. இத்தொகை மூன்று தவணைகளாக வழங்கப் பட உள்ளது. இதில் முதல் தவணையாக ரு.2000- வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற 2 ஹெக்டேர் அல்லது 5 ஏக்கர் நிலவுடமை யாளர்களுக்கு மட்டும் தகுதி அடிப்படையில் நிதி உதவி வழங்கப்படவுள்ளது. இத்திட்டம் தமிழகத்தில் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் இதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளாக இதுவரை 1,46,396 பயனாளிகள் கண்டறியப் பட்டுள்ளனர். எனினும் இத்திட்டத்தில் விடுபட்ட சிறு, குறு விவசாயிகள் மற்றும் ஆவண நகல்களை அளிக்க இயலாத சிறு, குறு விவசாயிகளுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் பொருட்டு வரும் 25.02.2019, 26.02.2019 மற்றும் 27.02.2019 ஆகிய மூன்று தினங்களில் கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடை பெறவுள்ளது. எனவே 2 ஹெக்டேருக்கு கீழ் (5 ஏக்கருக்குள்) விவசாய நிலங்கள் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் தங்களது ஆதார் எண், வங்கி கணக்கு எண், வங்கி கிளை ஐஎஃப்எஸ்சி எண், ஸ்மார்ட் கார்டு எண் மற்றும் கைபேசி எண் ஆகியவற்றை அவற்றின் நகல்களுடன் தங்களுக்கு சொந்தமான நிலங்கள் அமைந்துள்ள எல்லைக் குட்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அளித்து பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் (பொ) பார்த்தீபன் தெரிவித்துள்ளார். இவ்வாறு வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் விடுத்துள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Label