OUR CLIENTS
வேலூர் மத்திய சிறையின் வெளிப்புறத்தில் எரிபொருள் விற்பனை நிலையம் தொடக்கம்!
வேலூர் மத்திய சிறையின் வெளிப்புறத்தில் எரிபொருள் விற்பனை நிலையம் தொடக்கம்! Posted on 23-Feb-2019 வேலூர் மத்திய சிறையின் வெளிப்புறத்தில்  எரிபொருள் விற்பனை நிலையம் தொடக்கம்!

வேலூர், பிப்.23-

வேலூர் மத்திய சிறைச்சாலையின் வெளிப்புறத்தில் சிறைக் கைதிகளால் நடத்தப்படும் எரிபொருள் சில்லரை விற்பனை நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு சிறைத்துறை மற்றும் இந்தியன் ஆயில் இணைந்து சமூக மறு ஒருங் கிணைப்பு முன் முயற்சியாக வேலூர் மாவட்டத்தில் முதன்முறையாக சிறைச்சாலை எரிபொருள் சில்லரை விற்பனை நிலையத்தினை நேற்று (22.02.2019) சென்னை அரசு தலைமை செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனை
தொடர்ந்து இம்முயற்சியால் பயன்பெற்ற பயனாளியான வேலூர் சிறையைச் சார்ந்த ராமசாமி வாழ்வில் புதிய நம்பிக்கையை அளித்த தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்தார். சிறை வாழ்விலிருந்து சமுதாய வாழ்வுக்கு சிறைக்கைதிகள் மதிப்புமிக்க முறையில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், தமிழக அரசு, தங்கள் சிறைத் துறையும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமும் இணைந்து தமிழ்நாடு சிறைத் துறையின் 11 இடங்களில் எரிபொருள் சில்லரை விற்பனை நிலையங்களை நடத்த வழிவகை செய்தது. முதற்கட்டமாக 5 சில்லரை விற்பனை நிலையங்களை புழல் வேலூர், புதுக்கோட்டை, கோயம்புத்தூர் மற்றும் பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக, அம்பத்தூர் சாலையில் புழல், சேலம், திருச்சி (2), மதுரை, கோயம்புத்தூர் ஆகிய 6 இடங்களில் கட்டுமானம் செய்யப்பட்டு நடத்தப்படும்.
ஒவ்வொரு விற்பனை நிலையத்திலும் அத்தியாவசியமான வசதிகளை அதாவது போதுமான எரிபொருள் இருப்பு, லூப்ரிகன்ட்ஸ் சேகரிக்க இடவசதி, அதிநவீன எலக்ட்ரானிக் டிஸ்பென்சிங்
யூனிட்டுகள், சுற்றுச்சுவர் மேல் விதானம், வாகனம் செல்லும் பாதை, அடையாள காட்சி பலகை, விற்பனைக் கட்டடம், ஆடவர் மகளிருக்கான தனித்தனியான கழிப்பறைகள், ஏர் வசதி, குடிநீர் வசதி, சிசிடிவி ஆகிய வசதிகளை இந்தியன் ஆயில் ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் லாயல்ட்டி கார்டுகள், டிஜிட்டல் பேமென்ட் வசதிகள், பாதுகாப்பு சாதனங்கள் முதலான வாடிக்கையாளர்கள் தொடர்பான வசதிகளையும் அமைத்துத் தரும். இந்தியன் ஆயில் அனைத்து நிலையங்களில் ரீடெய்ல் ஆட்டோமேஷன் வசதிகளையும் செய்து தரும். ஏ.டி.எம்-க்காகவும் சிறைக்கைதிகள் உருவாக்கிய பொருட்களை விற்பனை செய்ய இடவசதியும் இந்தியன் ஆயில் நிறுவனத்தால் வர்த்தகறிதியான கட்டண வசூல் இல்லாமல் இந்தியன் ஆயில் அமைத்துத் தரும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து விற்பனை நிலையங்களிலும் மின்சார இணைப்பு உடன் கூடவே இந்தியன் ஆயில், மின்சார செலவை கட்டுப்படுத்த சூரியசக்தி மின்சக்தி சாதனத்தை
அமைத்திடும். இந்தியன் ஆயில், முதற்கட்டமாக 5 விற்பனை நிலையங்களுக்கு ரூ.10 கோடி (தோராயமாக) முதலீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டத்தில், மீதமுள்ள 6 விற்பனை நிலையங்களில் மற்றொரு ரூ.10 கோடி முதலீட்டை செய்யவுள்ளது.
சிறையில் இருப்பவர்கள் திறன் மிக்க தொழிலாளர்களாகப் பரிணாமம் பெறுகிறார்கள். தங்கள் தண்டனைக் காலம் முடிந்ததும் தங்குதடையின்றி சமூகத்துடன் சகஜமாக கலந்து பழக ஏதுவாக இருக்கும். சிறைச் சூழலிலிருந்து வெளியே வந்து சிறைத் துறைக்காக வருவாய் பெருக்கத்திற்கு தங்கள் பங்களிப்பை அளிக்க இயலும். அவர்களின் எளிதில் தீப் பற்றக்கூடிய பொருட்களை பாதுகாப்பாக கையாளும் நுட்பத்தையும் அதிநவீன தொழில்நுட்பங்களையும் கையாறும் நுட்பத்தையும் கற்றுக் கொள்கிறார்கள். 
ரொக்கம் கையாளுதல், வாடிக்கையாளர்களுடன் பழகும் விதம் ஆகிய அம்சங்களும் கற்றுக் கொள்கின்றனர். தண்டனை கால தருணத்தில் அவர்கள் சம்பாதிக்க முடியும். வாடிக்கையாளர்களை கவனிப்பவர்களாக பணி ஆற்றுபவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100- ஊக்கத்தொகை அளிக்கப்படும்.

இந்த முன்மாதிரி திட்டத்தை மாநில அரசு மற்றும் சிறைத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் எடுத்துச் செல்ல இந்தியன் ஆயில் நிறுவனம் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. சிறைத்துறையின் வருவாய் அதிகரிப்பதுடன் சிறையில் இருப்பவர்கள் இத்தகைய சமூக சீரமைப்பால் பெறும் பயன்கள் ஏராளம். 
சமூக அங்கீகாரம் கிடைப்பதோடு நேர்மையான முறையில் வருவாய் ஈட்டவும் வழிவகை உண்டாகிறது. இந்நிகழ்ச்சியில் வேலூர் சரக காவல் துறை துணைத் தலைவர் (சிறைத்துறை) கே.ஜெயபாரதி, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்தீபன், இந்தியன் ஆயில் தலைமை பொது மேலாளர் பொறுப்பு (சில்லரை வர்த்தகம்) எம்.அண்ணாதுரை, வேலூர் சிறைத்துறை கண்காணிப்பு அதிகாரி ஆண்டாள், இந்தியன் ஆயில் தலைமை பொது மேலாளர் (சில்லரை வர்த்தகம்) வி.கோபாலகிருஷ்ணன், இந்தியன் ஆயில் பொது மேலாளர் எஸ்.அண்ணாமலை, இந்தியன் ஆயில் சென்னை கோட்ட அலுவலக பொது மேலாளர் குமாரவேல் (சில்லரை வர்த்தகம்), இந்தியன் ஆயில் தென் மண்டல பொது மேலாளர் (கார்ப்பரேட் தொடர்பு) சபிதா நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். 

Label