OUR CLIENTS
சொத்து உரிமையாளர் - வாடகைதாரர் உரிமைகள் முறைப்படுத்துதல் சட்டம் இணையதளம்-முதல்வர் தொடங்கிவைப்பு
சொத்து உரிமையாளர் - வாடகைதாரர் உரிமைகள் முறைப்படுத்துதல் சட்டம் இணையதளம்-முதல்வர் தொடங்கிவைப்பு Posted on 23-Feb-2019 சொத்து உரிமையாளர் - வாடகைதாரர் உரிமைகள் முறைப்படுத்துதல் சட்டம் இணையதளம்-முதல்வர் தொடங்கிவைப்பு

சென்னை, பிப்.23-

தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம் தொடர்பான இணையதளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

சட்டம் நேற்று முதல் அமல்படுத்தப்படுவதை முன்னிட்டு அதனை மக்கள் எளிதாக பின்பற்ற வழிகாட்டும் வகையில் www.tenancy.tn.gov.in என்ற வலைதளத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்ததாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இ&சேவை மையங்கள் மூலம் உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இந்த வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்போது வாடகை அதிகார அமைப்பின் மூலம் வாடகை ஒப்பந்தப் பதிவு எண் வழங்கப்படும். இதன் மூலம் இரு தரப்பினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வாடகை ஒப்பந்த நிபந்தனைகள், விதிகளின்படி வாடகையை முறைப்படுத்துதல், இரு தரப்பினரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை சமன் செய்தல் ஆகியவை இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண வருவாய் கோட்ட அளவில் வாடகை அதிகார அமைப்பை ஏற்படுத்தி, துணை ஆட்சியர் அந்தஸ்துக்கு குறையாத அலுவலர் மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்படுவார்.

Label