OUR CLIENTS
21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அதிமுக அரசு நடத்துமா என சந்தேகம்: கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின்
21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அதிமுக அரசு நடத்துமா என சந்தேகம்: கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் Posted on 23-Feb-2019 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அதிமுக அரசு நடத்துமா என சந்தேகம்: கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின்

ஓசூர், பிப்.23-

21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அதிமுக அரசு நடத்துமா என சந்தேகம் எழுந்துள்ளது என ஓசூர் அருகே திமுக நடத்தும் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்து வருகிறது. இடைத்தேர்தலில் அதிமுக தோற்றால் ஆட்சி கவிழும். இதனால் 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அதிமுக அரசு நடத்துமா என சந்தேகம் உள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு பணியாற்ற திமுக காத்திருக்கிறது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.மோடியை அப்புறப்படுத்திவிட்டு மத்தியில் திமுக கூட்டணியில் ஒரு சிறப்பான ஆட்சி அமைய உள்ளது. திமுக ஆதரிப்பவரே இந்த நாட்டின் பிரதமராக வர போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என்று ஸ்டாலின் கூறினார். வரும் தேர்தலில் ஒரு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மேலும் கிராம மக்களிடம் ஸ்டாலின் குறைகளை கேட்டறிந்தார். திமுக வெற்றி பெறும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அரசு தாமதிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Label