OUR CLIENTS
வேலூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல் தனியார் பிரியாணி கடையால் பிரச்னை!
வேலூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல் தனியார் பிரியாணி கடையால் பிரச்னை! Posted on 25-Feb-2019 வேலூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல் தனியார் பிரியாணி கடையால் பிரச்னை!

வேலூர், பிப்.25-

வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜோதி பிரியாணி ஹோட்டலால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை அப்புறப்படுத்த வேண்டிய வேலூர் போக்குவரத்து பிரிவு போலீசார் பிரியாணியை வாங்கி கொண்டு கண்டும் காணாமல் அமைதி காத்து வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் வேலூர் போக்குவரத்து பிரிவு காவல் நிலையம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்துக்கு மிக அருகில் ஜோதி பிரியாணி ஹோட்டல் செயல்படுகிறது. இந்த ஹோட்டலால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் அந்த பகுதியில் மட்டும் ஒத்தையபடி பாதை போன்று காணப்படுகிறது. வாகனங்கள் செல்ல வழியின்றி சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டியுள்ளது. பிரியாணி சாப்பிட வருவோர், பார்சல் வாங்கிச் செல்ல வருவோர், தூக்கு தூக்கிகள் (ஸ்விகி, ஸொமாட்டோ) என சாலையை அடைத்து நின்று கொள்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் வாகன ஓட்டிகள் செல்ல வழிவகை செய்ய மாநகராட்சி நிர்வாகமோ, போக்குவரத்து பிரிவு போலீசாரோ எந்தவித நடவடிக்கையும் இதுநாள் வரையில் எடுத்ததாக தெரியவில்லை. மற்ற ஹோட்டல்கள் எல்லாம் சாலையை அடைத்து வியாபாரம் செய்யவில்லை. மாறாக இந்த ஜோதி பிரியாணி ஹோட்டல் நிர்வாகத்தினர் போக்குவரத்து பிரிவு போலீசாருக்கு இலவசமாக நாங்கள் பிரியாணி பார்சல் தந்து விடுகிறோம் என்று தெனாவெட்டாக தெரிவிப்பதுடன் எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று பதில் கூறுகின்றனர். அத்துடன் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறதே என்று கேள்விகேட்கும் பொதுமக்களை தரக்குறைவாக திட்டுகின்றனர். தடைபடும் போக்குவரத்தை ஒருநாள் கூட போக்குவரத்து பிரிவு போலீசார் ஒழுங்குபடுத்தியதோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது என்றோ பெயரளவுக்கு சொல்வது கூட இல்லை. கண்டும் காணாமல் அமைதியாக இருப்பதன் பின்னணியில் என்ன ஒளிந்துள்ளது என்பது மட்டும் பரம ரகசியமாகவே உள்ளது. இந்த கடைக்கு மட்டும் என்ன அப்படி ஒரு சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது காவல் துறையால் என்பது மட்டும் தெரியவில்லை. அஜினமோட்டாவை விருப்பம்போல வாரி உணவில் போட்டுவிடுகின்றனர். இது வயிறு தொடர்பான பல உபாதைகளை கொண்டு வரும் என்று எச்சரிக்கை விட்ட அரசு உத்தரவையும் காற்றிலே பறக்கவிட்டு விட்டு அதன்  போக்கில் செயல்படுகிறது இந்த ஹோட்டல். போக்குவரத்து காவல் துறை கடமையை செய்ய தயக்கம் காட்டுவது எதற்கு என்ற கேள்விக்கு இதுநாள் வரையில் விடை தெரியவில்லை. ஜோதி பிரியாணி ஹோட்டல் நிர்வாகத்திடம் கடமையை செய்யாமல் இருக்க பலனை எதிர்பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் நுகர்வோர் தரப்பில் அடுக்கடுக்கான புகார்களை கூறுகின்றனர். காவல் துறை பிரியாணி ஹோட்டலுக்காக மட்டும்  செயல்படுகிறதா? அல்லது பொதுமக்களுக்காக செயல்படுகிறதா? என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். இந்த ஜோதி பிரியாணி ஹோட்டல் பக்கம் செல்லும் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நின்று ஊர்ந்து செல்லும் பரிதாப நிலைக்கு தினமும் தள்ளப்படுகிறது. இதைத்தான் பொறுத்து கொள்ள முடியவில்லை. காவல் துறையின் கரிசனத்தால் தினமும் மகிழ்ச்சியாக வியாபாரம் செய்து வருகின்றது இந்த ஹோட்டல் நிர்வாகம். அத்துடன் இந்த ஹோட்டலில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்கு பதிலாக சில்வர் டச் கண்டெய்னர்களில் பிரியாணி பார்சல் செய்து தருகின்றனர். மறைமுகமாக பிளாஸ்டிக் கேரி பேக்குகளும் இங்கு புழக்கத்தில் விடப்படுகிறது. இதுபோன்ற பொருட்கள் தடை செய்யப்பட்டவை என்று ஹோட்டல் நிர்வாகத்துக்கு தெரியாதா?. ஏன் இதை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், உணவு கட்டுப்பாட்டு அலுவலர் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். பல புகார்களை தன்னகத்தே கொண்டுள்ள ஜோதி பிரியாணி ஹோட்டலை ஆய்வு நடத்தவோ, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செயல்படுத்தவோ மாநகராட்சி நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் தினமும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகளின் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

Label