OUR CLIENTS
திருவண்ணாமலை அக்னி மலையில் எச்சரிக்கையை மீறி வெளிநாட்டினர் கேமராக்களுடன் மலையில் உலா!
திருவண்ணாமலை அக்னி மலையில் எச்சரிக்கையை மீறி வெளிநாட்டினர் கேமராக்களுடன் மலையில் உலா! Posted on 25-Feb-2019 திருவண்ணாமலை அக்னி மலையில் எச்சரிக்கையை  மீறி வெளிநாட்டினர் கேமராக்களுடன் மலையில் உலா!

திருவண்ணாமலை, பிப்.25- 

 திருவண்ணாமலையில் எச்சரிக்கைகளை மீறி அண்ணாமலையார் மலைமீது வெளிநாட்டை சேர்ந்த சிலர் கேமராக்களுடன் ஏறியது பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

ஆன்மிக நகரமாக விளங்கும் திருவண்ணா மலையில் அண்ணா மலையார் கோயில் பின்புறம் 2668 அடி உயர தீபமலை அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி யன்று பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வருகின்றனர். மேலும் மலை மீது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா 10ம் நாள் மகா தீபம் ஏற்றப்படும். இதை தரிசிக்க இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வரும் லட்சக் கணக்கான பக்தர்கள் தீபத்தை தரிசிப்பார்கள். இதனால் இந்த மலையை பக்தர்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனர். இது தவிர வெளிநாட்டு பக்தர்கள் சிலரும் இங்கேயே தங்கி தியானம் போன்ற ஆன்மிகத்தில் ஈடுபடுகின்றனர். 
பாதுகாப்பு காரணங்களுக்காக திருவண்ணாமலையில் அனுமதியின்றி எலிகேம் பறக்கவிடக் கூடாது. மலை மீது அனுமதி யின்றி யாரும் ஏறக்கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபமலையில் அமைந் துள்ள கந்தாஸ் ரமம் செல்லும் காட்டுப் பாதையில் வெளிநாட்டினர் சிலர் எலிகேமுடன் செல்வதாக திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு நேற்று மாலை 5.30 மணியளவில் ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து போலீசார் உடனடியாக கந்தாஸ்ரமம் பகுதியில் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டனர். இரவு 8.30 மணியளவில் 15 பேர் அவ்வழியாக வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் கேமராக்கள் இருந்தது. ஆனால், எலி கேம் எதுவும் இல்லை.அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், கட்டுப்பாடு தெரியாமல் மலையில் ஏறியதாக அவர்கள் தெரிவித்தனர். இதை யடுத்து போலீசார், அனுமதியின்றி மலை ஏறக்கூடாது' என்று எச்சரித்து அனுப்பினர். எச்சரிக்கைகளை மீறி மலைமீது வெளிநாட்டினர், வெளிமாநிலத்தினர் ஏறும் சம்பவங்களால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Label