OUR CLIENTS
புல்வாமா தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
புல்வாமா தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்! Posted on 25-Feb-2019 புல்வாமா தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

ஸ்ரீநகர், பிப்.25-

புல்வாமா தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்., 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். புல்வாமா மாவட்டத்தின் கோரிபோரா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்களின் வாகனங்கள் சென்று கொண்டிருந்த போது, ஆதில் என்ற தீவிரவாதி 350 கிலோ எடை கொண்ட வெடி பொருட்களுடன் வந்த காரை, சிஆர்பிஎப் வீரர்களின் வாகனத்தில் மோதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தீவிரவாத தாக்குதலுக்கு பல்வேறு நாட்டின் தலைவர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்படுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து தீவிரவாதிகளின் புகலிடமாக உள்ள பாகிஸ்தானை சர்வதேசத்தின் துணையுடன் அனைத்து முனைகளிலும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் இந்தியா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 
மேலும் புல்வாமா தாக்குதலுக்கு வன்மையாக கண்டிப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் அறிவித்தது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயங்கரவாத தாக்குதல் கோழைத்தனமான செயல் என்றும் கூறியது. இதனிடையே புல்வாமா தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சார்ந்த 3 பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், புல்வாமா தாக்குதல் குறித்து நீதி விசாரணை நடத்த கோரி வழக்கறிஞர் வினீத் தந்தா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

Label