OUR CLIENTS
தமிழகம் முழுவதும் எப்போது நிரந்தரமாக மதுக்கடைகள் மூடப்படும்? அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி?
தமிழகம் முழுவதும் எப்போது நிரந்தரமாக மதுக்கடைகள் மூடப்படும்? அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி? Posted on 25-Feb-2019 தமிழகம் முழுவதும் எப்போது நிரந்தரமாக மதுக்கடைகள் மூடப்படும்? அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி?

மதுரை, பிப்.25-

தமிழகம் முழுவதும் எப்போது நிரந்தரமாக மதுக்கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து மார்ச் 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தஞ்சையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், தஞ்சை பள்ளி அஃக்ரஹாரம் பேருந்து நிலையம் அருகே புதிதாக டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. விதியின் படி டாஸ்மாக் கடைகள் அமைய உள்ள இடத்திலிருந்து 100 கி.மீ தொலைவிற்கு கோயில், பள்ளி உள்ளிட்டவை இருக்கக்கூடாது. ஆனால் பள்ளி அஃக்ரஹாரத்தில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடம் அருகே பேருந்து நிலையம், மாநகராட்சி அரசுப் பள்ளி, தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி, பெருமாள் கோயில் உள்ளிட்டவை அமைந்துள்ளது. 
இங்கு டாஸ்மாக் கடை அமைந்தால் பொதுமக்கள், மாணவர்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் இடையூறாக அமையும் என்பதால், பள்ளி அஃக்ரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, தஞ்சை பள்ளி அஃக்ரஹாரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை அமைக்க தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் தமிழக உள்துறை செயலர், டாஸ்மாக் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆகியோரை இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்த்தும் உத்தரவிட்டனர். 
இதனை தொடர்ந்து தமிழகத்தில் 2016ம் ஆண்டில் எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன, 2016ம் ஆண்டிற்கு பிறகு எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன, அவை எத்தனை கட்டங்களாக மூடப்பட்டன என்று கேள்வி எழுப்பினர். 2016க்கு பிறகு எத்தனை கடைகள் புதிதாக திறக்கப்பட்டன என்றும், தற்போது எத்தனை கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளன, மற்றும் தமிழகத்தில் எப்போது டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக மூடப்படும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு முதல் மதுக்கடைகளால் கிடைத்த வருவாய் எவ்வளவு என்பது குறித்த விவரங்களை மாவட்ட வாரியாக அளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 4ம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். 

Label