OUR CLIENTS
மகளிர் ஐபிஎல் போட்டி: பிளேஆஃப்பின் போது நடைபெறும் என தகவல்
மகளிர் ஐபிஎல் போட்டி: பிளேஆஃப்பின் போது நடைபெறும் என தகவல் Posted on 26-Feb-2019 மகளிர் ஐபிஎல் போட்டி: பிளேஆஃப்பின் போது நடைபெறும் என தகவல்

மும்பை, பிப்.26-
கடந்தாண்டு முதல் தொடங்கிய மகளிர் ஐபிஎல் காட்சி போட்டிகள் இந்தாண்டு பிளேஆஃப் சுற்றின் போது நடக்க வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்தாண்டு முதல் தொடங்கப்பட்ட மகளிர் ஐபிஎல் காட்சி போட்டி எப்போது நடைபெறும் என்ற கேள்வி இருந்தது. 

இதனையடுத்து பிளேஆப் சுற்றின் போது இந்த போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அப்போது மட்டுமே இந்த போட்டிகளை சாதகமான சூழ்நிலை இருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

இருந்தும் தேர்தல் குறித்த அறிவிப்புகளுக்கு பிறகே சரியான தேதியை கூற முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. இதில் டிரைல்பிளேசர்ஸ் மற்றும் சூப்பர் நோவா அணிகள் மோதுகின்றன. மேலும் இதில் உலகளவில் இருந்து நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனைகள் விளையாட உள்ளன. 

Label