OUR CLIENTS
விமானப் படைத் தாக்குதலில் தீவிரவாதிகள் 300 பேர் பலி?
விமானப் படைத் தாக்குதலில் தீவிரவாதிகள் 300 பேர் பலி? Posted on 26-Feb-2019 விமானப் படைத் தாக்குதலில் தீவிரவாதிகள் 300 பேர் பலி?

 ஸ்ரீ நகர், பிப்.26-
இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைந்திருந்த தீவிரவாத முகாம்கள் மீது விமானப் படை நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் 300 பேர் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில், இந்தியா -பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்திய விமானப் படை இன் று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது.
புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட  தீவிரவாதத் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரும் விதத்தில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில்,  பாலாகோட், சாக்கோத்தி, முசாஃபராபாத் ஆகிய இடங்களில் அமைந்திருந்த தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. மேலும், இந்த அதிரடி தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முக்கியமாக, புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டு அறையும் குண்டுவீசி தகர்த்தப்பட்டது.

Label