OUR CLIENTS
திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு!
திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு! Posted on 26-Feb-2019 திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு!

சென்னை, பிப்.26-

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுகவின் இரண்டாம் கட்ட தொகுதி பங்கீடு இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.  இதில் மூன்று தொகுதிகளை குறிப்பிட்டது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி.   இந்நிலையில் திமுக கூட்டணியில் அவர்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அவர்கள் உதயசூரிய சின்னத்தில் போட்டியிடவும் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன், திமுக தலைமையிலான கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஒரு தொகுதியில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.  மேலும் திமுக தலைமையி உள்ள கூட்டணியில் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் கொங்கு தேசிய கட்சி பணியாற்றும் என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி திருச்சி, நாமக்கல், பொள்ளாச்சி ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடுவதற்காக விண்ணப்பம் அளித்தது. இதில் பொள்ளாச்சி அல்லது நாமக்கல் தொகுதியில் ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Label