OUR CLIENTS
முகநூலில் நடக்கும் மோசடிகள் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கணும்!
முகநூலில் நடக்கும் மோசடிகள் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கணும்! Posted on 28-Feb-2019 முகநூலில் நடக்கும் மோசடிகள் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கணும்!

வேலூர், பிப்.28-

 இன்று முகநூல் (பேஸ்புக்) என்பது மக்களுக்கு ஓர் பொழுது போக்கும் இடமாக தான் இருக்கிறது. அதே சமயம் இன்றைக்கு பல மோசடியாளர்கள் மக்களிடம் இருந்து பணத்தை பறிப்பதற்கும் முகநூலை பயன்படுத்துகின்றனர்.

முகநூலை பயன்படுத்தும் மக்களுக்கு எவ்வாறெல்லாம் முகநூலில் மோசடிகள் நடைபெறுகிறது என்பதை பற்றி அறியாமல் இருக்கிறார்கள். மக்களின் அறியாமையை பயன்படுத்தி பல மோசடியாளர்கள் மக்களிடம் இருந்து பணத்தை பறிக்கின்றனர். ஒவ்வொரு மோசடியாளர்களும் மக்களிடம் இருந்து பணம் பறிப்பதற்கு புதிய புதிய தந்திரங்களை கையாளுகின்றனர். ஆனால் எல்லா மோசடியாளர்களும் பொதுவாக பயன்படுத்தும் தந்திரம் மக்களின் ஆசையை துண்டுவது மற்றும் மக்களை சிந்திக்க விடாமல் உடனே செயல்படவைப்பது தான் மோசடியாளர்களின் தந்திரம்.
இன்றைக்கு மக்களுக்கு சமூக வலைதளங்கள் பற்றி விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் தான் பல மோசடிகள் மற்றும் குற்றங்களும் நடக்கிறது. முகநூலை பயன்படுத்தும் மக்களிடம் விழிப்புணர்வு என்பது மிகவும் குறைவு என்பது தான் நிதர்சனமான உண்மை. முகநூலில் மக்களிடம் இருந்து பணம் பறிப்பதற்கு பல வழிகளை கையாளுகின்றனர் மோசடியாளர்கள். பொதுவாக அனைவருக்கும் பணத்தின் தேவை இருப்பதை கருத்தில் கொண்டு முகநூலில் ஒரு ஆங்கில நடிகரின் புகைப்படத்துடன் பணம் கட்டு கட்டாக இருப்பது போன்ற புகைப்படங்களுடன் லைக், ஷேர், கமெண்ட் பண்ணுங்க ஒரு மில்லியன் டாலர் பணப்பரிசு முதல் நுறு வெற்றியாளர்களுக்கு மற்றும் அந்த முகநூல் பதிவிற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள அந்த ஆங்கில நடிகர் நடித்த படத்தினை பதிவிறக்கம் செய்யுங்கள் என்று ஒரு லிங்க் அந்த பதிவு கீழ் கொடுக்கப்பட்டு இருந்தது. பின்பு அந்த பதிவில் கொடுக்கப்பட்டு இருந்து லிங்கில் சென்று படத்தினை பதிவிறக்க முற்படும்போது நம்முடைய கிரெடிட் கார்டு விவரங்களை கேட்கிறது. இது மோசடியாளர்களின் வலை அதில் உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை தந்தால் உங்கள் பணத்தை திருடுவதற்கு நீங்களே வழிவகுத்து கொடுத்து விட்டீர்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.
மக்களின் கிரெடிட் கார்டு விவரங்களை எல்லாம் சேகரித்து அதில் இருந்து பணத்தை மோசடியாளர்கள் திருடி விடுகின்றனர். இது ஒரு போலியான செய்தி என்று அந்த ஆங்கில நடிகரே அறிவித்துள்ளார். மேலும் மக்கள் இதில் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்பதையும் எச்சரித்துள்ளார். அடுத்ததாக முகநூல் பயனரின் கணக்குக்கு எதோ ஒரு போலியான கணக்கில் இருந்து மோசடியாளர்கள் “உங்களுக்கு முகநூல் ஒரு கோடி ரூபாய் பணம் சன்மானமாக அளிக்கிறது என்ற செய்தியும் அதில் உங்கள் பெயரும், மார்க் ஜுக்கர்பெர்க் புகைப்படமும் மற்றும் முகநூல் லோகோ அடங்கிய ஒரு புகைப்படத்தை பொது மக்களின் பேஸ்புக் கணக்குக்கு அனுப்புகின்றனர் பல மோசடியாளர்கள். அந்த செய்தியிலும் மக்களிடம் கிரெடிட் கார்டு விவரங்கள், மின்னஞ்சல் மற்றும் தனிப்பட்ட தகவல்களை கேட்கின்றனர். இது போன்று மக்களிடையே ஆசை வார்த்தைகளை கூறி அவர்களிடமே இருந்து தகவல்களை கேட்டு பெற்று அதன் மூலம் பல மோசடிகள் நடைபெறுகிறது. 
பல சாமானிய மக்கள் இதில் ஏமாறுகின்றனர் என்பது தான் வேதனைக்கூறிய ஒன்று. மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் இது போன்ற செய்தி உங்களுக்கு வந்தால் நம்பாதீர்கள்.  ஏனென்றால் இது ஒரு வகை மோசடி ஆகும். முகநூலில் நடக்கும் இன்னொரு மிக பெரிய மோசடி உண்மையான முகநூல் பயனர்களின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து மோசடியாளர்கள் ஓர் போலியான முகநூல் கணக்கை உருவாக்கி அதில் அவர்களின் புகைப்படத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கின்றனர். இதில் பெண்களின் புகைப்படத்தையே அதிகமாக பயன்படுத்தி மோசடியாளர்கள் பணம் பறிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் தான் இவற்றில் ஏமாறாமல் இருக்க முடியும். இன்றைக்கு நம் சமூகத்தில் சிலவற்றை பற்றி பேசினால் அவற்றுக்கு செவி சாய்ப்பதில்லை மக்கள் முன் எச்சரிக்கையாகவும் இருக்கமாட்டார்கள். ஆனால் அந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிறகு தான் அதை பற்றி பேசுவார்கள், உணர்வார்கள், எச்சரிக்கையாகவும் இருப்பார்கள். இது எப்போது நம் சமூகத்தில் மாறுகின்றாதோ அப்போது தான் இணையத்தில் நடக்கும் மோசடிகளும் குறையும்.

Label