OUR CLIENTS
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் எதிரொலி தமிழகத்தில் உஷார் நிலையில் போலீஸார்!
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் எதிரொலி தமிழகத்தில் உஷார் நிலையில் போலீஸார்! Posted on 28-Feb-2019 பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் எதிரொலி தமிழகத்தில் உஷார் நிலையில் போலீஸார்!

சென்னை, பிப்.28-

பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய பதில் தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து மாநில போலீஸாரும் உஷார் நிலையில் உள்ளனர். தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ம் தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் உள்பட 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்திய வீரர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்த வேண்டும் என இந்திய மக்கள் அனைவரது ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் எல்லையோரம் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மீது நேற்றுமுன்தினம் அதிகாலை இந்திய ராணுவம் வான்வழியாக பதில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை உள்ளது. இதைத் தொடர்ந்து எந்த நேரத்திலும் பாகிஸ்தான் தாக்கலாம். எனவே உஷார் நிலையில் இருக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அறிவுரை வழங்கியது.
இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளன. தமிழகத்திலும் கண்காணிப்பு பணி உச்சத்தில் உள்ளது. அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்படி தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடலோர மாவட்டங்கள்இதேபோல் 13 கடலோர காவல் மாவட்டங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் நேரடியாக மோதமுடியாவிட்டால் குறுக்கு வழியில் தாக்குதல் நடத்த முயலும். இதை முறியடிக்கவே கடலோர பகுதிகளிலும், மற்ற பகுதிகளிலும் கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல், தங்கும் விடுதிகளில் சந்தேகத்துக்கிடமான முறையில் யாரேனும் தங்கி உள்ளார்களா எனவும் மத்திய மாநில உளவு பிரிவு போலீஸார் கண்காணித்து வருகின்றனர். சந்தேக நபர்களின் நடமாட்டம் இருந்தால் அதுகுறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும்படி டிஜிபி அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Label