OUR CLIENTS
வேலூரில் மயானக் கொள்ளை திருவிழா சார் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை!
வேலூரில் மயானக் கொள்ளை திருவிழா சார் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை! Posted on 28-Feb-2019 வேலூரில் மயானக் கொள்ளை திருவிழா சார் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை!

வேலூர், பிப்.28-

வரும் மார்ச் மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ள மயான கொள்ளை திருவிழா குறித்து வேலூர் சார் ஆட்சியர் தலைமையில் நேற்று ஆலேசானை கூட்டம் நடந்தது.

வேலூர் சார் ஆட்சியர் கா.மெகராஜ் தலைமையில் வரும் 6ம் தேதி வேலூரில் நடைபெறவுள்ள மயானக் கொள்ளை திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காவல் துறை, போக்குவரத்து காவல் துறை, வேலூர் மாநகராட்சி, தீயணைப்பு துறை, மின்சாரத்துறை மற்றும் விழா ஒருங்கிணைப் பாளர்களுடன் அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்துவது குறித்து ஆலேசானை கூட்டம் நடைபெற்றது. இதில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து எடுத் துரைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வேலூர் டிஎஸ்பி, வருவாய் அலுவலர்கள், வேலூர் மாநகராட்சி நகரமைப்பு அலுவலர், வேலூர் வடக்கு, தெற்கு மற்றும் விருதம்பட்டு காவல் ஆய்வாளர்கள், வேலூர் தீயணைப்பு துறை அலுவலர், விழா ஒருங்கிணைப்பாளர்கள், தோட்டப்பாளையம், சைதாப்பேட்டை, விருதம்பட்டு, கழிஞ்சூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்டனர். அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய சட்டதிட்டங்களை ஒப்புக் கொண்டு கையொப்பம் இட்டுச் சென்றனர்.

Label