OUR CLIENTS
வேலூர் அரசினர் மகளிர் பிற்காப்பு இல்லத்தில் இருந்து சிறுமி ஓட்டம்!
வேலூர் அரசினர் மகளிர் பிற்காப்பு இல்லத்தில் இருந்து சிறுமி ஓட்டம்! Posted on 28-Feb-2019 வேலூர் அரசினர் மகளிர் பிற்காப்பு இல்லத்தில் இருந்து சிறுமி ஓட்டம்!

வேலூர், பிப்.28-

வேலூர் அரசினர் மகளிர் பிற்காப்பு இல்லத்தில் தங்கியிருந்த 13 வயது சிறுமி தப்பியோடி விட்டார். இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் பெரிய அல்லாபுரத்தில் அரசினர் மகளிர் பிற்காப்பு இல்லத்தில் ருத்ரன் மகள் நாகரத்தினம்(13) என்ற சிறுமி தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி காலை 7 மணிக்கு குளித்து விட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் திரும்பி வரவேயில்லை. இதனால் வேலூர் பெரிய அல்லாபுரம் அரசினர் மகளிர் பிற்காப்ப நிறுவனத்தில் பணிபுரியும் கண்காணிப்பாளர் சை.பிளாரன்ஸ் ரூபாவதி எங்கு தேடியும் சிறுமி நாகரத்தினம் கிடைக்கவேயில்லை. இதுகுறித்து கடந்த 22ம் தேதி சை.பிளாரன்ஸ் ரூபாவதி வேலூர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காணாமல் போன நாகரத்தினம் 155 செ.மீ., உயரமும், வட்ட முகமும் கொண்டவர். சிகப்பு மற்றும் ஆரஞ்சு கலந்த சுடிதார் அணிந்திருந்தார். அவரது இடது பக்க மணிக்கட்டில் ஒரு மச்சமும், இடது பக்க கன்னத்தில் ஒரு மச்சமும் உள்ளது என்று அங்க அடையாளங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவரை காண்போர் வேலூர் பாகாயம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம். இதுகுறித்து அரசினர் பிற்காப்பு கண்காணிப்பாளர் சை.பிளாரன்ஸ் ரூபாவதி கொடுத்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமி நாகரத்தினத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

Label