OUR CLIENTS
பாமக நிறுவனர் ச.ராமதாஸுடன் புதுச்சேரி என்.ரங்கசாமி சந்திப்பு!
பாமக நிறுவனர் ச.ராமதாஸுடன் புதுச்சேரி என்.ரங்கசாமி சந்திப்பு! Posted on 28-Feb-2019 பாமக நிறுவனர் ச.ராமதாஸுடன்  புதுச்சேரி என்.ரங்கசாமி சந்திப்பு!

விழுப்புரம், பிப்.28-

பாமக நிறுவனர் ராமதாஸை நேற்று அவரது இல்லத்தில் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி சந்தித்தார். 

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரே ஒரு மக்களவைத் தொகுதி மட்டுமே உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த புதன்கிழமை அறிவித்தார். புதுச்சேரி எப்போதுமே காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வருவதாலும், இப்போது ஆளும் கட்சியாக இருப்பதாலும் பேச்சுவார்த்தையில் எவ்வித இழுபறியும் இன்றி, திமுக கூட்டணியில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. 
அதிமுக கூட்டணியில் அந்தத் தொகுதி புதுச்சேரியில் வலுவான எதிர்க்கட்சியாக விளங்கும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப் பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்-இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கடந்த வியாழக்கிழமை அறிவித்தனர். இதையடுத்து புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ்-என்.ஆர்.காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி உருவாகியுள்ளது. 
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸை திண்டிவனத்தையடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வரும், என்.ஆர். காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி நேற்று சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Label