OUR CLIENTS
இந்தியா - பாகிஸ்தான் இடையே செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தம்
இந்தியா - பாகிஸ்தான் இடையே செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தம் Posted on 28-Feb-2019 இந்தியா - பாகிஸ்தான் இடையே செல்லும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தம்

புது தில்லி, பிப்.28-

இந்தியா - பாகிஸ்தான் இடையே இயக்கப்பட்டு வந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பாகிஸ்தான் இன்று தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து இந்தியாவின் டில்லிக்கு சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. கராச்சியில் இருந்து புறப்பட்ட ரயில் லாகூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
தற்பொழுது இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக ரயில் சேவை அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை நிறுத்தப்படுவதாக  ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.  என ரயில்வே அதிகாரிகள் டான் நியூஸ் டிவி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
சம்ஜவுதா என்ற பெயருக்கு உடன்பாடு என்று அர்த்தம். இது இந்தி வார்த்தையாகும். இதில் 6 ஸ்லீப்பர்கோச், 3ஏசி கோச் பெட்டிகள் கொண்ட ரயில் ஆகும்.
இந்த ரயில் கடந்த 1976ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டு இயங்கி வந்தது. 

Label