OUR CLIENTS
80 விழுக்காடு பெண்கள் 2 குழந்தைகளுக்கு பின் குடும்பக்கட்டுப்பாடு : விஜயபாஸ்கர்
80 விழுக்காடு பெண்கள் 2 குழந்தைகளுக்கு பின் குடும்பக்கட்டுப்பாடு : விஜயபாஸ்கர் Posted on 28-Feb-2019 80 விழுக்காடு பெண்கள் 2 குழந்தைகளுக்கு பின் குடும்பக்கட்டுப்பாடு : விஜயபாஸ்கர்

சென்னை, பிப்.28-

தமிழ்நாட்டில் 80 விழுக்காடு தாய்மார்கள், இரண்டு குழந்தைகளுக்கு பிறகு குடும்பநல அறுவை சிகிச்சை செய்துகொள்வதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

குடும்ப நலத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் தாய் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மருத்துவ நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று விருதுகளை வழங்கிப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கடந்த 10 ஆண்டுகளில், 23 லட்சத்து 26 ஆயிரம் பெண்களுக்கும், 8 ஆயிரத்து 710 ஆண்களுக்கும், குடும்ப நல அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.  

Label