OUR CLIENTS
புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு காரணமல்லை: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் எழுப்பும் புது சர்ச்சை
புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு காரணமல்லை: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் எழுப்பும் புது சர்ச்சை Posted on 02-Mar-2019 புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு காரணமல்லை: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் எழுப்பும் புது சர்ச்சை

இஸ்லாமாபாத், மார்ச் 2-

புல்வாமா தாக்குதலுக்கும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,
”புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பை ஏற்கவில்லை. அதில் சில குழப்பங்கள் உள்ளன. அதை தெளிவுபடுத்த அந்த அமைப்புக்கு தெரிந்த சில நபர்கள், அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர்களுக்கும் புல்வாமா தாக்குதலுக்கு தொடர்பு இல்லை என்று அவர்கள் மறுத்துள்ளனர்" என கூறினார்.
”நமக்குள் பிரச்சனைகள் உள்ளன. ஆனால் நாம் இந்த பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கவேண்டும். ஒருவருக்கொருவர் ஏவுகணைகள் மூலம் தாக்குவதன் மூலமா? ஒருவருக்கொருவர் பேசுவதன் மூலமா? ஆதாரங்களை பகிர்ந்துகொள்வதன் மூலமா? பாகிஸ்தான் சமாதானத்தை விரும்புகிறது. நாம் முன்னோக்கி செல்ல உறுதிப்பாட்டோடு செயல்படவேண்டும்” என்று குரேஷி கூறினார்.
ஏற்கனவே, மசூத் ஆசாருக்கு உண்மையில் உடல்நிலை சரியில்லை என்றும் அவர் பாகிஸ்தானில் இருப்பதையும் குரேஷி ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Label