OUR CLIENTS
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விருதுநகரில் 6ம் தேதி பேரணி: ஸ்டாலின் அறிவிப்பு
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விருதுநகரில் 6ம் தேதி பேரணி: ஸ்டாலின் அறிவிப்பு Posted on 04-Mar-2019 மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விருதுநகரில் 6ம் தேதி பேரணி: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, மார்ச் 04-

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக விருதுநகரில் நாளை மறுநாள் (மார்ச்.6) திமுக சார்பில் பேரணி நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான தோழமைக் கட்சியினருடனான இணக்கமான உடன்பாடு விரைந்து நிறைவேற உள்ளது என்றும், இது கொள்கை மற்றும் மக்களுக்கான வெற்றி கூட்டணி எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், மத்தியிலும், அதனை தொடர்ந்து மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரலாறு வரும் மக்களவை தேர்தலிலும் உறுதியாக திரும்பும் என ஸ்டாலின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Label