OUR CLIENTS
வேலூரில் சாக்கடை கால்வாய் அகற்ற வழிவிடாமல் மாநகராட்சி அலுவலருக்கு இடையூறு செய்த நகைக்கடை!
வேலூரில் சாக்கடை கால்வாய் அகற்ற வழிவிடாமல் மாநகராட்சி அலுவலருக்கு இடையூறு செய்த நகைக்கடை! Posted on 04-Mar-2019 வேலூரில் சாக்கடை கால்வாய் அகற்ற வழிவிடாமல்  மாநகராட்சி அலுவலருக்கு இடையூறு செய்த நகைக்கடை!

வேலூர், மார்ச் 4-

வேலூரில் தூர்ந்துபோன கழிவுநீர் செல்லும் சாக்கடையை தூர் வாரி தங்கு தடையின்றி கழிவு நீர் செல்ல வழிவகை செய்யச் சென்ற மண்டல அலுவலருக்கு இடையூறு செய்த நகைக்கடை.

ஆனால் அந்த இடையூறையும் பொருட்படுத்தாமல் கழிவு நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்து கொடுத்துள்ளார் கடமைவீரனான மாநகராட்சி மண்டல அலுவலர் செந்தில்குமார்.
வேலூர் என்றதும் நினைவுக்கு வருவது கார்ப்பரேட் நிறுவனங்கள் கடைகளை வைத்து கொண்டு தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தி கொள்கின்றனர். ஆனால் பொதுமக்களை பற்றி துளி கட அவர்களுக்கு கவலை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைக்கு என்ன வியாபாரம் நடக்கிறது. கடை உரிமையாளருக்கு என்ன பதில் அளிப்பது என்பதிலேயே காலை கடை திறந்தது முதல் பணியாளர்கள் ஒருவித படபடப்புடனேயே காணப்படுகிறார்கள். பொதுமக்களுக்கு எந்தவிதமாக அசௌகரியம் எற்பட்டாலும் பரவாயில்லை, தங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மட்டும் நிம்மதியாக வந்து வாகனங்களை பார்க்கிங் செய்து விட்டு பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்பதிலேயே குறியாக உள்ளனர். 
இதுபோன்ற சம்பவம் வேலூரில் கடந்த வெள்ளிக்கிழமை (1ம் தேதி) நடந்துள்ளது. அதாவது வேலூர் ஆபீஸர்ஸ் லைனில் உள்ள ஜாய் ஆலுகாஸ் நகைக்கடை அருகே நுழைவு பகுதியில் சிமெண்ட் சிலாப்புகள் போட்டு கழிவுநீர் செல்லும் வாய்க்காலை மூடியுள்ளனர். இதனால் அந்த கடைக்கு அருகில் உள்ள கானாற்றுக்கு கழிவநீர் செல்ல முடியாமல் ஏலகிரி அரங்கம் வரையில் கழிவுநீர் தேங்கி பின்புறத்தில் தேங்க ஆரம்பித்தது. இதனால் துர்நாற்றம் வீச ஆரம்பித்தது. இதை பார்த்த வேலூர் மாநகராட்சி 3வது மண்டல அலுவலர் செந்தில்குமார் உடனடியாக மாநகராட்சி பணியாளர்களை கொண்டு வந்து கழிவுநீர் செல்லும் வாய்க்காலை பொக்லைன் கொண்டு தூர் வாரினார். அனைத்து இடமும் முடிந்த பிறகும் கழிவு நீர் தங்கு தடையின்றி செல்லாமல் மீண்டும் தேங்கி நின்றது. இதையடுத்து நகைக்கடை அருகே தண்ணீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து செந்தில்குமார் அந்த சிமெண்ட் சிலாப்புகளை உடைத்து அடைப்புகளை சரி செய்ய பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டார். அப்போது நகைக்கடை மேலாளர் மற்றும் ஊழியர்கள் மண்டல அலுவலர் செந்தில்குமாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதில் சிலாப்புகளை உடைக்காமல் உள்ளே ஏதாவது தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அடைப்புகளை சரி செய்து கொள்ளுங்கள் என்று மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு உத்தரவிட்டனர். அதெல்லாம் சரிப்படாது என்று மாநகராட்சி மண்டல அலுவலர் செந்தில்குமார் நகைக்கடை ஊழியர்களிடம் தெரிவித்து விட்டார். இதற்கு பதிலளித்து பேசிய நகைக்கடை ஊழியர்கள் நீங்கள் சிலாப்புகளை உடைத்து விட்டால் எங்கள் கடைக்கு எந்த வாடிக்கையாளர்களும் வருகை தர மாட்டார்கள் வாதம் செய்தனர் அத்துடன் நாங்கள் யாரென்று உங்களுக்கு தெரியாது, மறைமுகமாக பேசியுள்ளனர், மற்றும் பணி செய்ய விடாமல்  தடுத்துள்ளனர். எந்த இடையூறையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர் பணியை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார். அதாவது சிமெண்ட் சிலாப்புகளை உடைத்து அப்புறப்படுத்தி விட்டு மண் மேடு அடைத்திருந்த சாக்கடையை தூர் வாரி சுத்தம் செய்து தடைபட்டிருந்த கழிவு நீர் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்தார் செந்தில்குமார்.இதுபோன்ற மக்கள் பணியாற்றும் அதிகாரிகள் மாநகராட்சியில் இன்றளவும் இருக்கத்தான் செய்கின்றனர். எந்த உருட்டல் மிரட்டலுக்கும் ஆட்படாமல் மக்கள் பணியே மகேசன் பணி என்று துணிந்து பணியாற்றிய செந்தில்குமாருக்கு மாநகர மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். தைரியமாக செயல்பட்ட அவரது செயல் பாராட்டுக்குரியது. அவர் செய்த செயற்கரிய பணியால் கழிவுநீர் தங்கு தடையின்றி அருகில் உள்ள கானாற்றில் சென்று விழுகிறது. கொசுக்கள் உற்பத்தியாவது, துர்நாற்றம் வீசுவது போன்ற இடையூறுகள் ஏற்படாமல் பணியை செவ்வனே செய்து முடித்துள்ளார் மண்டல அலுவலர் செந்தில்குமார். எதற்கெடுத்தாலும் இன்று கையூட்டு வாங்கிக் கொண்டு பணியாற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மத்தியில் நேர்மையும், துணிச்சலும் மிகுந்த அதிகாரியாக செந்தில்குமார் வலம் வருவது அனைவருக்கும் புது தெம்பை ஊட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது  பணி சிறக்க வாழ்த்துக்களை மாநகரத்தின் வளர்ச்சியில் அக்கரையும், விருப்பமும் கொண்ட சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தெரிவித்த வண்ணமாக உள்ளனர்.

Label