OUR CLIENTS
பொது அறிவை பயன்படுத்துங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை
பொது அறிவை பயன்படுத்துங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை Posted on 04-Mar-2019 பொது அறிவை பயன்படுத்துங்கள்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

ஜாம்நகர், மார்ச் 04-

ரபேல் போர் விமானம் நம்மிடம் இருந்திருந்தால், பாகிஸ்தானின் போர் விமானங்கள் அனைத்தும் வீழ்த்தப்பட்டிருக்கும் என்று தான் நான் கூறினேன்.

தயவுசெய்து அனைவரும் பொது அறிவை பயன்படுத்துங்கள் என பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
குஜராத் மாநிலத்திற்கு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜாம்நகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று கலந்துகொண்டு பேசினார். இதில் பேசிய அவர்,
”பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இந்தியா அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்காது. அதை வேரோடு அகற்ற முயற்சிக்கும்” என்று கூறினார்.
”ரபேல் போர் விமானங்கள் நம் விமானப்படையில் இருந்திருந்தால், கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்று கூறினேன். ஆனால், நம் விமானப்படையின் தாக்குதலில் மோடி சந்தேகப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன” என்று கூறினார்.
”தயவுசெய்து பொது அறிவை பயன்படுத்துங்கள். நான் என்ன கூறினேன் என்று முதலில் புரிந்துகொள்ளுங்கள். நம்மிடம் அப்போது ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால், நம் போர் விமானம் ஒன்றுகூட கீழே வீழ்ந்திருக்காது. அவர்களின் ஒரு போர் விமானமும்கூட பாதுகாப்பாக திரும்பி இராது.
”பயங்கரவாத்திற்கு முடிவு கட்டுவதே என் இலக்கு. அதற்கான முயற்சிகளில் நான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு ஒரே எண்ணம்தான் என்னை ஆட்சியிலிருந்து அகற்றவேண்டும் என்பதுதான்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Label