OUR CLIENTS
தமிழக உள் மாவட்டங்களை 6, 7ம் தேதிகளில் வாட்டி வதைக்க போகும் வெயில் : வானிலை மையம் எச்சரிக்கை
தமிழக உள் மாவட்டங்களை 6, 7ம் தேதிகளில் வாட்டி வதைக்க போகும் வெயில் : வானிலை மையம் எச்சரிக்கை Posted on 04-Mar-2019 தமிழக உள் மாவட்டங்களை 6, 7ம் தேதிகளில் வாட்டி வதைக்க போகும் வெயில் : வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, மார்ச் 04-

கோடை கால துவக்கத்திலேயே பல ஊர்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பூர், தருமபுரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் நாமக்கல், வேலூர், கரூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்றும்,  தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் இன்று இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் நிலவும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் தெளிவாக காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்ப நிலையாக 33 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்னரே சில மாவட்டங்களில் வெயில் வெளுக்க துவங்கிவிட்டது. இதனால் பல பகுதிகளில் 100 டிகிரி வெப்பநிலை காணப்படுகிறது. பொதுமக்கள் புழுக்கம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், இப்போது குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதனால் தமிழக உள் மாவட்டங்களை அடுத்த 2 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்கும் என்றும், அனல்காற்றும் வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. காற்றின் திசையில் மாறுபாடு காணப்படுவதால், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

Label