OUR CLIENTS
மக்களவை தேர்தல் 2019 : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
மக்களவை தேர்தல் 2019 : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு Posted on 04-Mar-2019 மக்களவை தேர்தல் 2019 : திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை, மார்ச் 04-

 திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் இந்திய கம்யூனிஸ்ட் நடத்திய பேச்சுவார்த்தையில் 2 தொகுதிகள் வழங்குவது என உடன்பாடு செய்யப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவர்த்தையில் இதற்கான தொகுதி உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து  ஒப்பந்தம் கையெழுத்தானது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பின்னர் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் திமுகவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கும் என்றார். 
தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் திராவிட கழகத்தின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது பற்றிய இறுதி முடிவு எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். திமுக சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, எ.வ.வேலு உள்ளிட்டோர்  பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் 1 தொகுதி கொடுக்கப்படும் என திமுக தரப்பில் முன்வைக்கப்பட்டது. ஆனாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2 தொகுதி கேட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  ஏற்கனவே திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் விடுதலையில் சிறுத்தை கட்சி இணைந்து போட்டியிட்ட போது அவர்களுக்கு பாராளுமன்றத்தில் 2 தொகுதி வழங்கப்பட்டதை மையமாக வைத்து திருமாவளவன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
திமுகவை பொறுத்தவரையில் இன்றைக்குள் கூட்டணி தொகுதிக்கான முடிவுகளை முடிவுசெய்ய வேண்டும் என்ற விஷயத்தில் திமுக முனைப்பாக உள்ளதால், வி.சி.க.வுக்கு 2 தொகுதிகளை தருவதாக  ஒப்புக்கொண்டதன் அடிப்படியில் அதற்கான உடன்பாடு கையெழுத்தானது. பின்னர் திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கெனவே முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன் வரும் நாடாளுமன்றத் தேர்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகவும், மத்தியில் ஆட்சி செய்யும் வகுப்புவாதக் கட்சியான பாஜகவை அகற்றவும், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சியை அகற்றவும், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் ஒரு மகத்தான பணியை மேற்கொண்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பேச்சுவார்த்தை இன்று மிக சுமுகமான முறையில் நடைபெற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், நாங்களும் கலந்து பேசியதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு என முடிவு செய்யப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்வதாக கூறினார். 

Label