OUR CLIENTS
இந்திய நீர்மூழ்கி கப்பலை விரட்டியடித்ததாக பாகிஸ்தான் அறிவிப்பு
இந்திய நீர்மூழ்கி கப்பலை விரட்டியடித்ததாக பாகிஸ்தான் அறிவிப்பு Posted on 05-Mar-2019 இந்திய நீர்மூழ்கி கப்பலை விரட்டியடித்ததாக பாகிஸ்தான் அறிவிப்பு

புதுடெல்லி, மார்ச் 05-

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்தியாவின் நீர்மூழ்கி கப்பலை விரட்டியடித்தோம்.

அமைதியை விரும்புவதால் தாக்குதல் நடத்தவில்லை என்று அந்நாட்டின் கடற்படை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் இந்தியாவின் அதிநவீன நீர்மூழ்கி கப்பல் நேற்று அத்துமீறி நுழைய முயன்றதாகவும், தங்களது திறமையை பயன்படுத்தி பாகிஸ்தான் கடற்படையினர் இந்த அத்துமீறல் முயற்சியை முறியடித்ததாகவும் அந்நாட்டின் கடற்படை செய்தி தொடர்பாளர் இன்று பேட்டியளித்துள்ளார். 
அமைதியை விரும்பும் பாகிஸ்தான் அரசின் நல்லெண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்திய நீர்மூழ்கி கப்பலின் மீது நான் தாக்குதல் நடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
பாகிஸ்தான் அரசின் இந்த பொய்யை இந்தியா மறுத்துள்ளது. பாகிஸ்தான் இதுபோல் தொடர்ந்து பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது சகஜம்தான் என நமது கடற்படையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Label