OUR CLIENTS
தேர்தலில் விதிமீறல்களை தடுக்க சி விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம்- தலைமை தேர்தல் அதிகாரி
தேர்தலில் விதிமீறல்களை தடுக்க சி விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம்- தலைமை தேர்தல் அதிகாரி Posted on 07-Mar-2019 தேர்தலில் விதிமீறல்களை தடுக்க சி விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம்- தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை, மார்ச் 07-

மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக சி விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பல்வேறு கட்சித் தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் தேர்தலுக்கான பொதுக்கூட்டம், பிரச்சாரம் குறித்த திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 
இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி அமைப்பது, தொகுதி ஒதுக்கீடு போன்றவற்றில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதேபோல் தேர்தல் கமிஷனும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று காலை தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் விதிமீறல் உள்ளிட்ட புகார்கள் இருந்தால் பொதுமக்கள், ‘சி விஜில்’ (C Vigil) எனும் செயலியின் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தலாம். தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்கள் அறிய 1950 எனும் எண்ணை தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம். 
சேலத்தில் 212 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அந்த வாக்குச்சாவடிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். 
தேர்தலுக்காக தமிழகத்தில் மொத்தம் 67,664 வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. 1,67,932 வாக்குப்பதிவு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அறிய 88,447 விவிபேட் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பணியில் 3,36,536 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தவிர வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர விரும்புபவர்களுக்கான கால அவகாசம் இன்னும் உள்ளது. வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப்  பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Label