OUR CLIENTS
கூட்டணியா? தனித்துப் போட்டியா? விஜயகாந்த் தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை
கூட்டணியா? தனித்துப் போட்டியா? விஜயகாந்த் தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை Posted on 07-Mar-2019 கூட்டணியா? தனித்துப் போட்டியா? விஜயகாந்த் தலைமையில் தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை

சென்னை, மார்ச் 07-

கூட்டணி சேர்வதில் ஏற்பட்டுள்ள மிகவும் இக்கட்டான சூழலில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று சென்னை வந்த பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியுஷ் கோயலிடம், தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு தலைவர் சுதிஷ் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதற்கிடையே அக்கட்சியின் சில நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினர். இதனால் தேமுதிகவின் இதர நிர்வாகிகளும், தொண்டர்களும் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
பாமகவுக்கு சமமான தொகுதிகள் மற்றும் அக்கட்சி கேட்கும் தொகுதிகளையே தேமுதிகவும் கேட்பதே இழுபறி நீடிக்கக் காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் நேற்று இரவுக்கு பிறகு தற்போது வரை அதிமுக கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வருமாறு தேமுதிகவுக்கு அழைப்பு வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த இக்கட்டான சூழலில், தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள் கூடி ஆலோசித்து வருகின்றனர்.

Label