OUR CLIENTS
"சர்வதேச மகளிர் தினம்" முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து!
"சர்வதேச மகளிர் தினம்" முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து! Posted on 07-Mar-2019

பெண்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெண்களின் சிறப்பினையும்,உரிமையையும் பறை சாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அனைத்து மகளிருக்கும் எனது பெண்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில், அதிமுக அரசு பெண் குழந்தைகளுக்காக தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், பெண்களுக்கு தாலிக்கு தங்கம், விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து அதனை சிறப்பாக ஸ் செயல்படுத்தியும் வருகிறது. 
பெண்கள் தொடர்ந்து தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டு, வாழ்வில் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு, இருளை நீக்கும் ஒளி விளக்காக உயர்ந்திட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

Label