OUR CLIENTS
பாகிஸ்தானில் குண்டு வீசி 19 மரங்களை அழித்ததாக இந்திய விமானப்படையினர் மீது வழக்கு பதிவு
பாகிஸ்தானில் குண்டு வீசி 19 மரங்களை அழித்ததாக இந்திய விமானப்படையினர் மீது வழக்கு பதிவு Posted on 09-Mar-2019 பாகிஸ்தானில் குண்டு வீசி 19 மரங்களை அழித்ததாக இந்திய விமானப்படையினர் மீது வழக்கு பதிவு

இஸ்லாமாபாத், மார்ச் 09-

பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை விமானிகள் குண்டுகளை வீசியதில் 19 மரங்களை அழிக்கப்பட்டதை எதிர்த்து அடையாளம் தெரியாத பாகிஸ்தான் வனத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அடையாளம் தெரியாத இந்திய விமானப்படை விமானிகள்  மரங்களை அழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய போர்விமானங்கள் குண்டுகளை வீசி அழித்தன. இந்த தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதை மறுத்த பாகிஸ்தான் ராணுவம், இந்திய விமானங்கள் வீசிய குண்டுகள் வெட்ட வெளியில் வீழ்ந்ததாகவும் அதனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய விமானப்படையின் தாக்குதலால் பாகிஸ்தான் பாலகோட் பகுதியில் இருந்த 19 மரங்கள் அழிந்து போனதாக பாகிஸ்தான் வனத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அடையாளம் தெரியாத இந்திய விமானப்படை விமானிகள் மீது பாகிஸ்தான் வனத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக பாகிஸ்தானின் எக்ஸ்பிரஸ் நியூஸ் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

Label