OUR CLIENTS
தலைமை செயலகத்தை கட்சிப் பணிக்கு பயன்படுத்திய முதல்வர், துணை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்
தலைமை செயலகத்தை கட்சிப் பணிக்கு பயன்படுத்திய முதல்வர், துணை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம் Posted on 09-Mar-2019 தலைமை செயலகத்தை கட்சிப் பணிக்கு பயன்படுத்திய முதல்வர், துணை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்

சென்னை, மார்ச் 09-

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தை கட்சிப் பணிக்கு பயன்படுத்திய முதல்வர் - துணை முதல்வர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக ஆளுநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடித மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஆர்.எஸ். பாரதி இன்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எழுதிய கடித விவரம்:
"அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்கும் ஒருவர், அவர் அமர்ந்து பணியாற்றும் அரசின் தலைமைச் செயலகத்தை, அரசுப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்பது விதிமுறை.
தமிழக அரசின் முதல்வரான எடப்பாடி பழனிசாமி சட்ட விதிமுறைகளுக்கு எதிராகவும் - அரசியல் சட்டத்தின்படி, தான் பதவியேற்கும் போது எடுத்த பதவி பிரமாண உறுதிமொழிக்கு எதிராகவும் செயல்பட்டு, தான் சார்ந்த அதிமுக கட்சிப் பணிகளுக்காக, தலைமைச் செயலகத்தை  பயன்படுத்தி இருக்கிறார். இது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துதல் ஆகும். இதற்கு துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வமும் துணை போயிருக்கிறார்.
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் -அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதும் குற்றம்சாட்டியதால்,அதிமுகவிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிச்சாமி. 
தேர்தல் நெருங்கும் இவ்வேளையில், மீண்டும் கே.சி. பழனிச்சாமியை கட்சியில் இணைக்கும் செயல் அரசு தலைமைச் செயலகத்தில் நடந்துள்ளது. செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி தொலைக்காட்சிகளிலும் – பத்திரிகைகளிலும் செய்திகளாக வெளி வந்துள்ளன.
விதிமுறைகளின்படி, அரசு தலைமைச் செயலகத்தை அரசியல் பணிகளுக்காக பயன்படுத்தக் கூடாது என்ற அடிப்படை விதிகள்கூட அறியாமல் முதல்வராக பொறுப்பு வகித்துவரும் எடப்பாடி பழனிசாமியும் - துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வமும், தாங்கள் வகித்து வரும் அரசு பதவிகளையே தரக்குறைவாக்கி விட்டனர்.
இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளராவது அவர்களுக்கு அந்த அடிப்படை விதிமுறையை சுட்டிக்காட்டியிருக்க வேண்டும். தலைமைச் செயலகத்தை தவறாக பயன்படுத்தினால், அதற்கு தலைமைச் செயலாளரும் பொறுப்பாவார். ஆனால், வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வால், தமிழக அரசின் முதல்வராக இருக்கின்ற எடப்பாடி பழனிசாமியும் – துணை முதல்வராக இருக்கின்ற ஓ.பன்னீர்செல்வமும் - தமிழக அரசின் தலைமைச் செயலாளரும் சட்ட விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர்.
எனவே, தமிழக ஆளுநர், இப்பிரச்சினையில் தலையிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமிருந்தும் – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்தும் - தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடமிருந்தும் உடனடியாக விளக்கம் கேட்டு, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி இன்று ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Label