OUR CLIENTS
சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட விரும்பும் தி.மு.கவினருக்கு நேர்காணல் தொடங்கியது
சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட விரும்பும் தி.மு.கவினருக்கு நேர்காணல் தொடங்கியது Posted on 09-Mar-2019 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் போட்டியிட விரும்பும் தி.மு.கவினருக்கு நேர்காணல் தொடங்கியது

சென்னை, மார்ச் 09-

தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை மக்களவை தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டும் என பல கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இடைத்தேர்தலுக்கான தயாரிப்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒருபகுதியாக தி.மு.க. சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனு பெறப்பட்டது.
இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெற்று வருகிறது.

Label