OUR CLIENTS
கூவம் ஆற்றை ஆக்கிரமித்து விவசாயம் அமோகம்!
கூவம் ஆற்றை ஆக்கிரமித்து விவசாயம் அமோகம்! Posted on 09-Mar-2019 கூவம் ஆற்றை ஆக்கிரமித்து விவசாயம் அமோகம்!

திருவள்ளூர், மார்ச் 9-

கூவம் ஆற்றை ஆக்கிரமித்து விவசாயம் கனஜோராக நடைபெற்று வருகிறது. பொதுப்பணி துறையினரின் உறக்கத்தால் ஆக்கிரமிப்பு விவசாயிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

திருவள்ளூர் - வேலூர் மாவட்ட எல்லையில் பாலாற்றில் இருந்து வரும் உபரி நீரை சேகரிக்க கேசாவரம் அணை கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து உபரி நீர் கூவம் வழியாக பேரம்பாக்கம், கடம்பத்தூர், மணவாளநகர், பூந்தமல்லி, மதுரவாயல், வழியாக சென்னை மெரினா கடற்கரை அருகில் வங்கக் கடலில் கலக்கிறது. வழியில் பலரும் கூவம் ஆற்றினை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக கடம்பத்தூர் - மணவாள நகர் இடையில் கூவம் ஆற்றின் நடுவில் புதிதாக பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் பலர் ஆற்றினை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர்.மேலும் ஆற்றின் நடுவில் மணலை எடுத்து புதிதாக கட்டப்பட்டு வரும் தரைப்பாலம் மற்றும் கரையை பலப்படுத்துவதற்காக மணலை கொட்டி உள்ளனர். இதன் காரணமாக ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்ட பால தூண்கள் வலுவிழந்து இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.இதை தவிர்க்க பொதுப்பணி துறையினர் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பினை இரும்பு கரம் கொண்டு அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். கரையை பலப்படுத்த திருட்டு மணல்கடம்பத்தூர் - மணவாள நகர் இடையே கூவம் ஆற்றின் குறுக்கில் கட்டப்பட்ட மேம்பால பணி நிறைவடைந்து விட்டது. பாலத்தின் இருபகுதியிலும் கரையினை பலப்படுத்த கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சுவற்றின் நடுவில் மணலை கொட்டுவதற்கு ஆற்றுக்குள் இருந்தே மணல் எடுத்து பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்ட மேம்பால தூண் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் அருகில் அபாயகர பள்ளம் உள்ளது. மழைக் காலத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டால் மேம்பாலம் மற்றும் சுற்றுச்சுவர் சேதமடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. கோணி பைகளில் மணல் திருட்டுகூவம் ஆற்றில் பகல் நேரத்திலேயே சிலர் குடும்பத்துடன் கோணி பைகளில் மணல் திருடிச் செல்கின்றனர். இவர்கள் மணலை அள்ளி கோணி பைகளில் நிரப்பி பின் அதனை ஆற்றின் கரையோரம் சேகரிக்கின்றனர். பின் மாட்டு வண்டி மற்றும் மீன்பாடி வண்டிகளை வரவழைத்து மணல் மூட்டைகளை கடத்திச் செல்கின்றனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Label