OUR CLIENTS
வீடுகளின் மின் பயன்பாட்டில் உஷார் டெபாசிட் தொகை அதிகரிக்க வாய்ப்பு!
வீடுகளின் மின் பயன்பாட்டில் உஷார் டெபாசிட் தொகை அதிகரிக்க வாய்ப்பு! Posted on 09-Mar-2019 வீடுகளின் மின் பயன்பாட்டில் உஷார் டெபாசிட் தொகை அதிகரிக்க வாய்ப்பு!

வேலூர், மார்ச் 9-

வீடுகளில் 500 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்பதால் வெயில் காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரியம் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகவும் 500 யூனிட் வரை மானிய விலையிலும் வழங்குகிறது. அதற்கு மேல் மின் பயன்பாடு சென்றால் மானியம் இல்லாமல் முழு கட்டணம் செலுத்த வேண்டும். வீடு, கடை உள்ளிட்ட தாழ்வழுத்த பிரிவில் மின் இணைப்பு வழங்கும் போது செக்யூரிட்டி டிபாசிட் என்ற பெயரில், குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. இது மின் பயன்பாட்டை பொருத்து இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படுகிறது. இதன் படி மின் இணைப்பு பெறும்போது தெரிவித்ததை விட அதிக மின்சாரம் பயன்படுத்தினால் கூடுதல் செக்யூரிட்டி டிபாசிட் தொகை வசூலிக்கப்படுகிறது. குறைவாக பயன்படுத்துவோரிடம் வசூலிப்பதில்லை. தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் வெயில் தாக்கத்தை சமாளிக்க பலரும் அதிக நேரம் ஏசி பயன்படுத்தி வருகின்றனர். 
இதனால் பிப்., 28ல் தமிழக மின் தேவை முதல் முறையாக 15 ஆயிரத்து, 448 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் முதல் வீடுகளில் செக்யூரிட்டி டிபாசிட் வசூலிக்கப்பட உள்ளது.வெயிலால் அதிக மின்சாரம் பயன்படுத்தினால் அதற்கு ஏற்ப கட்டணமும் அதிகம் வரும். 
இதை தவிர்க்க மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம். கோடையில் அனல் காற்று மற்றும் வெயில் எச்சரிக்கையால் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கியுள்ளது. சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதல் வெப்பநிலை பதிவாகும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 
இந்நிலையில் பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் வழங்கியுள்ள அறிவுரைகள்: 
இந்திய வானிலை ஆய்வு மையம் கோடை வெயில் மற்றும் அனல் காற்று தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடையில் உடலில் நீர்ச்சத்து குறைய வாய்ப்புள்ளது. எனவே மாநில பேரிடர் மேலாண்மை நிறுவன அறிவுறுத்தல்படி அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், மோர், வீட்டில் தயார் செய்யப்பட்ட திரவ உணவு பொருட்கள், எலுமிச்சை சாறு போன்றவற்றை அருந்தலாம். 
மெல்லிய மற்றும் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெயிலில் வெளியே செல்ல நேர்ந்தால் தொப்பி அல்லது குடை போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.வீடுகளை வெப்பம் தாக்காத நிலையில் காற்றோட்டமாக வைத்து கொள்ள வேண்டும். அதிக வெயில் நேரத்தில் வெளியில் மாணவர்களை நடமாட விட வேண்டாம். போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.

Label