OUR CLIENTS
நைஜீரியாவில் பள்ளி கட்டிடம் விழுந்து விபத்து: 9 பேர் பலி; 100க்கும் மேற்பட்டவர் சிக்கி தவிப்பு
நைஜீரியாவில் பள்ளி கட்டிடம் விழுந்து விபத்து: 9 பேர் பலி; 100க்கும் மேற்பட்டவர் சிக்கி தவிப்பு Posted on 14-Mar-2019 நைஜீரியாவில் பள்ளி கட்டிடம் விழுந்து விபத்து: 9 பேர் பலி; 100க்கும் மேற்பட்டவர் சிக்கி தவிப்பு

அபுஜா, மார்ச் 15-

நைஜீரியாவில் தொடக்கப் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர்.

மேலும்  இடிபாடுகளில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்கும் பணி தீவிரமாக  நடைபெற்று வருகிறது.
நைஜீரியா நாட்டின் லோகோஸ் நகரில் தொடக்கப் பள்ளி கட்டிடம் உள்ளது. மூன்று மாடிகள் கொண்ட இக்கட்டடம் எதிர்பாராத விதமாக நேற்று இரவு இடிந்து  விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் அப்பள்ளியில் படித்த வந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிருக்குப் போராடி வருகின்றனர்.  இதுவரை 37 பள்ளி குழந்தைகளை உயிருடன் மீட்டுள்ளனர்.
இவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக இறங்கியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர்.

Label