OUR CLIENTS
மசூத் அசார் விவகாரம்: சீன பொருட்களை புறக்கணிக்க டுவிட்டரில் அழைப்பு
மசூத் அசார் விவகாரம்: சீன பொருட்களை புறக்கணிக்க டுவிட்டரில் அழைப்பு Posted on 14-Mar-2019 மசூத் அசார் விவகாரம்: சீன பொருட்களை புறக்கணிக்க டுவிட்டரில் அழைப்பு

புதுடில்லி, மார்ச் 15-

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் ஐநாவின் தீர்மானத்திற்கு சீனா 4வது முறையாக முட்டுக்கட்டை போட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீன பொருட்களை இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று டுவிட்டரில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

ஜெய்ஷ் –இ-முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்ற பாகிஸ்தான் தரப்பு வாதத்திற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் –இ- முகமது இயக்கம் பொறுப்பேற்றதால் மசூத் அசார் விவகாரத்தில் சீனா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் என்று இந்தியா எதிர்பார்த்தது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.
சீனாவின் இந்த செயல் இந்திய அரசை மிகவும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. சீனாவுக்கு எதிராக இந்தியர்கள் தங்கள் கோபத்தை சமூக வளைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் இந்திய அரசாங்கம் சீன பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும். கடைகள் மற்றும் ஆன்லைனில் விற்கப்படும் சீன தயாரிப்புகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று டுவிட்டரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாய்காட் சீனா (#BoycottChineseproducts) என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பல டுவிட்டர்வாசிகள் மொபைல் ஆப் உள்ளிட்ட பல சீன பொருட்களை இந்தியர்கள் பயன்படுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்தியா ஏன் 8000 கோடி டாலர் மதிப்பிலான சீன பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். சீன பொருட்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.
டிக்டாக் போன்ற சீன செயலிகளை நீக்குங்கள், சீன துரோகிகளுக்கு பாடம் புகட்டுங்கள் போன்ற செய்திகளை மக்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
மேலும் சிலர் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திபெத் மற்றும் தைவானை சுதந்திர நாடுகளாக இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.
மசூத் அசாருக்கு சீனா ஆதரவளிப்பது போன்ற கேலி சித்திரங்களும் இடம்பெற்றுள்ளன.
மசூத் அசார் விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.
‘‘மசூத் அசாரை 1999ம் ஆண்டு விடுதலை செய்ததற்கான விலையை நாம் இன்றுவரை கொடுத்து வருகிறோம். சீனாவுக்கு 1950ம் ஆண்டு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர் பதவியை வாங்கி கொடுத்ததன் பலனாக இன்று வரை வேட்டையாடப்படுகிறோம்’’
‘‘ஜம்மு காஷ்மீர் தொடர்பாக ஐநாவில் சட்டவிரோத மனு அளித்தது இன்று வரை நம்மை சீரழித்து வருகிறது. இனிமேல் பிறரை குறைகூறும் முன் நம்மை நாமே சுயபரிசோதனை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். இதுபோன்ற தவறுகளுக்கு இனி வாய்ப்பளிக்க கூடாது’’ என்று சுப்பிரமணிய சுவாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Label