OUR CLIENTS
தி.மு.க - கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!
தி.மு.க - கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! Posted on 15-Mar-2019 தி.மு.க - கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

சென்னை, மார்ச் 15 -
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய முஸ்லீம் லீக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி மற்றும் மதிமுகவுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.  மீதியுள்ள 20 தொகுதிகளில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது. 

இதில், எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை இன்று திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி, 


திமுக(20) : தூத்துக்குடி, தென்காசி(தனி),  திருநெல்வேலி, திண்டுக்கல், தர்மபுரி, பொள்ளாச்சி, சேலம், அரக்கோணம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், ஸ்ரீபெரும்புதூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம்(தனி), நீலகிரி(தனி),  வேலூர், தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை.



காங்கிரஸ்(10) : திருவள்ளூர் (தனி) , கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், புதுச்சேரி, கன்னியாகுமரி

விடுதலை சிறுத்தைகள் கட்சி (2) : விழுப்புரம் (தனி),  சிதம்பரம் (தனி)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2) : திருப்பூர், நாகப்பட்டினம்  (தனி)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(2) : கோவை, மதுரை 


இந்திய முஸ்லீம் லீக் கட்சி (1) : ராமநாதபுரம் 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (1) : நாமக்கல் 

இந்திய ஜனநாயக கட்சி (1) : பெரம்பலூர் 

மதிமுக(1)  : ஈரோடு

தி.மு.கவின் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர்கள் வருகிற 17ம் தேதி அறிவிக்கப்படுவார்கள் எனவும் மு.க.ஸ்டாலின் தெரித்துள்ளார். 

Label