OUR CLIENTS
தேர்தல் ஆணையத்தில் வீடியோ மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் குவிகிறது
தேர்தல் ஆணையத்தில் வீடியோ மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் குவிகிறது Posted on 16-Mar-2019 தேர்தல் ஆணையத்தில் வீடியோ மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் குவிகிறது

சென்னை, மார்ச் 16-

தேர்தல் நடத்தை விதிகள் மீறுபவர்கள் பற்றி தேர்தல் ஆணையத்திற்கு வீடியோ மூலம் பொதுமக்கள் புகார்கள் அளித்து வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு தெரிவித்தார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு இன்று பேட்டியளிக்கும் போது கூறியதாவது:-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 5 நாட்களில் மொத்தம் ரூ.4 கோடியை 86 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 73 லட்சம் ரூபாய் அதிகாரிகள் சோதனையில் சிக்கியுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் பற்றி பொதுமக்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம். இதற்காக தனி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலி பற்றி அறிந்ததும் ஏராளமான பொது மக்கள் தங்கள் பகுதியில் உள்ள தேர்தல் விதிமீறல்களை வீடியோவில் படம் எடுத்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுவரை 297 பேர் வீடியோ மூலம் தேர்தல் புகார்களை அளித்துள்ளனர்.
அந்த புகார்களில் 38 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 81 புகார்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தேர்தல் விதிமீறல்களை தைரியமாக வீடியோ மூலம் படம் எடுத்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கலாம்.
பொதுமக்களுக்கு உதவும் வகையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்காளர்கள் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள 1950 என்ற உதவி எண் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உதவி எண் மூலம் வாக்குச்சாவடி எங்கு இருக்கிறது என்பதையும் பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும்.
நேற்று வரை 48 ஆயிரத்து 155 பேர் இந்த உதவி எண்ணை தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றுள்ளனர். இந்த உதவி எண் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக மக்கள் மத்தியில் பாராட்டு பெற்றுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் தேர்தலை முன்னிட்டு சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தேர்தலை சுமூகமாக நடத்துவதற்காக ஏற்கனவே பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டவர்கள் தேடப்பட்டு வந்தார்கள்.
அவர்களில் 5,694 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக திங்கட்கிழமை மதியம் 2.30 மணிக்கு தலைமை செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னையில் உள்ள கல்லூரியில் பங்கேற்ற கூட்டம் பற்றி பாரதிய ஜனதா புகார் அளித்துள்ளது. இதுபற்றி தேர்தல் அதிகாரியான சென்னை மாநகராட்சி கமி‌ஷனரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர் பதில் அளித்ததும் அதுபற்றி தெரிவிக்கப்படும்.
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும். எஸ்.டி.,எஸ்.சி. பிரிவினர் ரூ.12,500 செலுத்த வேண்டும்.
சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள் ரூ.10 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும். எஸ்.டி., எஸ்.சி. பிரிவினர் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும். ரிசர்வ் வங்கி செலான் மற்றும் ரொக்கப் பணமாக டெபாசிட் செலுத்தலாம். காசோலை ஏற்கப்படமாட்டாது.
இவ்வாறு அவர் கூறினார்.

Label