OUR CLIENTS
தேர்தல் நாளில் மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தகவல்
தேர்தல் நாளில் மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தகவல் Posted on 18-Mar-2019 தேர்தல் நாளில் மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தகவல்

சென்னை, மார்ச் 18-

மதுரையில் சித்திரை திருவிழாவும், மக்களவைத் தேர்தலும் ஒரேநாளில் நடப்பதால், அன்று வாக்குப்பதிவு நேரம் இரண்டு மணிநேரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார். 

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. 5 ஆண்டுகள் வருமான வரி தாக்கல் செய்ததற்கான சான்றிதழ், குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.
இது வழக்கத்தைக் காட்டிலும் ஒரு மணி நேரம் அதிகம். மதுரையில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார். சித்திரை திருவிழாவை கருத்தில் கொண்டு இரவு 8 மணி வரை வாக்குப்பதிவுக்கு அனுமதி வழங்கப்படுவதாக அவர் கூறியுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 111 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Label