OUR CLIENTS
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2,500 வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2,500 வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு Posted on 18-Mar-2019 பொள்ளாச்சி பாலியல் வழக்கு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2,500 வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

கோவை, மார்ச் 18-

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் 2,500 வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் மற்றும் புதுவை வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (19-ந்தேதி) நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் உள்ள 2, 500-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்பட்டது. திட்டமிட்டபடி நாளையும் நீதிமன்ற புறக்கணிப்பு நடைபெறும் என்று வக்கீல்கள் கூறினர்.

Label